Published:Updated:

`மன உளைச்சலுடன்தான் சென்றார்; இப்போது ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளார்!'- வீராங்கனை சமீஹா பர்வினின் தாய்

தடகளப் போட்டியில் வாங்கிய பரிசுகளுடன் மாணவி சமீஹா பர்வீன்

``சமீஹா பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் போலந்திற்குச் சென்றார். தகுதித் தேர்விற்குப் பின் சரியாக பயிற்சி செய்யக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை" என்றார் அவரது தாய்.

`மன உளைச்சலுடன்தான் சென்றார்; இப்போது ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளார்!'- வீராங்கனை சமீஹா பர்வினின் தாய்

``சமீஹா பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் போலந்திற்குச் சென்றார். தகுதித் தேர்விற்குப் பின் சரியாக பயிற்சி செய்யக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை" என்றார் அவரது தாய்.

Published:Updated:
தடகளப் போட்டியில் வாங்கிய பரிசுகளுடன் மாணவி சமீஹா பர்வீன்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த முஜீப் - சலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வின். 11-ம் வகுப்புப் படித்து வரும் இவர் சிறு வயதில் இருந்தே தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் சமீஹாவின் கேட்கும் திறனும், பேசும் திறனும் பறிபோனது. பெற்றோர் வீட்டை விற்று மருத்துவம் பார்த்தும் சமீஹாவை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை.

சமீஹாவின் பெற்றோர் சுக்குக் காபி கடை நடத்தி வருகின்றனர். தன் மகளின் தடகள ஆர்வத்தைப் பார்த்து ஊக்குவித்தனர். இதனால் தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்று அசத்தினார் சமீஹா. மேலும் 2020-ம் ஆண்டு உலக தடகளப் போட்டிக்கும் இவர் தேர்வானார். ஆனால் கொரோனா காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து ஆனாலும் தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.

சமீஹா பர்வின் விளையாடுவதை அகண்ட திரையில் பார்க்க கூடிய மக்கள்
சமீஹா பர்வின் விளையாடுவதை அகண்ட திரையில் பார்க்க கூடிய மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மாதம் போலந்தில் நடந்து முடிந்த உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார் சமீஹா. கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி டெல்லியில் நடந்த தகுதித் தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட அவர், 4.2 மீட்டர் இலக்கை கடந்து 5 மீட்டர் தூரம் தாண்டி, போலந்துக்குச் செல்லும் தகுதியைப் பெற்றார். ஆனால் ஒரே பெண் வீராங்கனையாக அவர் தேர்வாகி இருந்ததால், பாதுகாப்பு மற்றும் செலவுக் காரணங்களால் மற்ற ஆண் வீரர்களுடன் அவரை போலந்துக்கு அழைத்துச் செல்ல தேசிய விளையாட்டு ஆணையம் தயங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை சமீஹா பர்வின் தன் பெற்றோருடன் சென்று சந்தித்து போலந்தில் இந்தியா சார்பில் விளையாட அனுமதிக்குமாறு கோரினார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீஹா சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. சமீஹாவை போலந்து அழைத்துச் செல்ல வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

சமீஹா பர்வினை வவிளையாட அனுப்பிவைத்த போது
சமீஹா பர்வினை வவிளையாட அனுப்பிவைத்த போது

பல்வேறு தடைகளைத் தாண்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குச் சென்ற சமீஹா பர்வின் ஏழாவது இடம் பிடித்து, ஆறுதல் வெற்றி பெற்றார். சமீஹா பர்வின் போலந்து நாட்டில் விளையாடுவதைப் பார்க்க கடையாலுமூடு பகுதியில் ஊரே ஒன்று கூடியது. இரவு 7 மணிக்கு கடையால் மதரஸ அரங்கில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமீஹா முதல் சுற்றில் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்குச் சென்ற போது மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மகளின் விளையாட்டை பார்க்க ஆவலுடன் வந்த ஊரார், உறவினர்களை முஜீப் - சலாமத் தம்பதி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

16 பேர் கலந்து கொண்ட நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய சமீஹா சராசரியாக 4.98 மீட்டர் தாண்டியிருந்தார். இது குறித்து சமீஹாவின் தாய் சலாமத் கூறுகையில், ``சமீஹா பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் போலந்திற்குச் சென்றார். தகுதித் தேர்விற்குப் பின் நடந்த குளறுபடிகளால் சரியாக பயிற்சி செய்யக்கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பல இடங்களிலிருந்து கிடைத்த புறக்கணிப்புகளால் மன உளைச்சலுடன்தான் போலந்து சென்றார்.

அகண்ட திரையில் சமீஹாவின் போட்டியை காணும் மக்கள்
அகண்ட திரையில் சமீஹாவின் போட்டியை காணும் மக்கள்

ஆனால் அங்கு சென்ற பின்னர் மிகவும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டார். 16 பேரில் ஏழாவது இடத்தைப் பெற்றார். முதல் 8 பேர் பட்டியலில் இடம் பிடிப்பவர்கள், வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். அந்த வகையில் என் மகள் தகுதி பெற்றுவிட்டார். இந்த ஆறுதல் வெற்றி அவரின் தொடர் பயணத்துக்கு மிகவும் முக்கியமானதாகக் கைகொடுக்கும்'' என்றார்.

வாழ்த்துகள் சமீஹா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism