Published:Updated:

எதிர்பார்த்த அர்ஜுனா விருது... எதிர்பாராமல் வந்த பத்மஸ்ரீ!

அனிதா பால்துரை
பிரீமியம் ஸ்டோரி
அனிதா பால்துரை

- நேற்று, இன்று, நாளை பகிரும் அனிதா பால்துரை

எதிர்பார்த்த அர்ஜுனா விருது... எதிர்பாராமல் வந்த பத்மஸ்ரீ!

- நேற்று, இன்று, நாளை பகிரும் அனிதா பால்துரை

Published:Updated:
அனிதா பால்துரை
பிரீமியம் ஸ்டோரி
அனிதா பால்துரை

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் வரலாற்றில் அழுத்தமாகப் பதிக்கப்பட வேண்டிய பெயர் அனிதா பால்துரை.

18 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடிய வர், ஆறு வருடங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியவர். ஒன்பது முறை ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டது, 2013-ம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த பத்து வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டது என இவை எல்லா வற்றையும் கடந்து திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும், பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் அனிதா பால்துரை. அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பித்து அது வழங்கப் படவில்லை என்றதும் நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்தினார். இந்த ஆண்டு அனிதா பால்துரைக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், ஒலிம்பிக் குறித்த பார்வை, பெண்கள் விளையாட்டு, அனிதாவின் தற்போதைய வாழ்க்கை… இப்படிப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடினோம்…

கணவருடன்...
கணவருடன்...

சந்தோஷமான தருணத்தோடு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிஞ்சிருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க?

கொரோனாவால மனசளவுல ரொம்ப சோர்வுற்றிருந்த நிலையில, இந்த ஒலிம்பிக்ஸ் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கு. நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை ஜெயிச்சபோது அவ்வளவு உற்சாகம். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், எந்தப் பின்புலமும் இல்லாம விளையாட்டுல முன்னேறி வந்துகிட்டிருக்கிறவங்கள்ல ஒருத்தர். குத்துச்சண்டை போட்டியில வெண்கலப் பதக்கம் வாங்கியிருக்கிற அவங் களோட வெற்றியும் எனக்கு முக்கியமா தெரிஞ்சது. மொத்தம் ஏழு பேர் பதக்கம் ஜெயிச்சிருக்காங்க. அவங்கள்ல மூன்று பெண்கள். விளையாட்டுல ஆண்களுக்கு பெண்கள் சளைச்சவங்க இல்லைனு நிரூபிச் சிருக்காங்க. எனக்கு பயங்கர ஹேப்பி.

இப்ப நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க..?

ரயில்வேயில வேலை பார்க்குறேன். என் காதல் கணவர் கார்த்திக் பிரபாகரன் போலீஸ் வேலையில் இருக்கார். ஏழு வயசுல ஒரு பையன், மூணு வயசுல ஒரு பொண்ணு. வேலை, வீடு, குழந்தைகளுடைய ஆன்லைன் கிளாஸ், என் ஃபிட்னெஸ்னு வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. இரண்டாவது குழந்தைக்கு அப்புறம் இந்திய அணியில விளையாடுறதை விட்டு ஒதுங்கி, லீக் போட்டிகள்ல விளையாடி கிட்டிருந்தேன். கொரோனா வந்த பிறகு அதுவும் முடியாமப் போயிருச்சு. இப்போ டிபார்ட்மென்ட் டோர்னமென்ட்டுகள்ல மட்டும் கலந்துகிறேன்.

18 வருடங்கள் கூடைப்பந்து விளையாட்டுல நீங்க சந்திச்ச நெருக்கடியான காலகட்டம் எது?

2002-ல் இரண்டு முறையும், 2006-ல் ஒரு முறையும் காயம் ஏற்பட்டு எனக்கு சர்ஜரி நடந்தது. அந்தக் காலகட்டமும் பிரசவத்துக்குப் பிறகான கால கட்டமும் எனக்கு சவாலா இருந்தது. 2013-ல் எனக்குக் கல்யாணம். 2014-ல் குழந்தை பிறந்தது. ஆறு மாதங்களுக் குப் பிறகு, நேஷனல்ஸ் போட்டி கள்லயும் எட்டு மாசத்துல இந்திய அணியிலயும் விளையாடினேன். என்னால முடியுமான்னு எனக்குள்ள கேள்வி எழுந்தப்போ, மேரிகோம்தான் நினைவுக்கு வந்தாங்க. நம்பிக்கை யோட களத்துல இறங்கினேன். பிரசவத்துக்குப் பிறகு, நான் 20 கிலோ எடை கூடியிருந்தேன். தாய்ப்பால் கொடுத்துக்கிட்டிருந்ததால டயட் பண்ண முடியலை. உடலை ரொம்பவும் சிரமப்படுத்தாம வெயிட்டை குறைக்க ரொம்ப மெனக்கெட்டேன். ஆனா, அதை யெல்லாம் கடந்து வந்துட்டேன். இப்போ கல்யாணத்துக்குப் பிறகும், குழந்தை பெற்ற பிறகும் நிறைய பேர் நம்பிக்கையோட விளையாட வர் றாங்க… இன்னும் வருவாங்க.

அர்ஜுனா விருதுக்காக உச்ச நீதிமன்றம் வரை போய் போராடினீங்க. இப்போ உங்களுக்கு பத்ம விருது அறிவிக்கப் பட்டிருக்கு. விருதுகள் குறித்த உங்கள் பார்வை என்ன?

18 வருஷங்களா இந்திய அணிக்காக விளையாடியிருக்கேன். ஒன்பது ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டி கள்ல விளையாடிருக்கேன். டாப் 10 பிளேயர்ஸ் லிஸ்ட்டுலயும் நான் இருந்திருக்கேன். இத்தனைக்கும் பிறகும் ஒரு விருதை எதிர்பார்க்கக் கூடாதா? அது என் உரிமை. அதனால தான் உச்ச நீதிமன்றம் வரை போய் வழக்கு தொடுத்தேன். இந்த வருஷம் எனக்கு பத்ம விருது அறிவிக்கப் பட்டிருக்கு. விருதுதான் காலங்கள் கடந்தும் ஒருத்தரை அடையாளப் படுத்தும். இன்னும் சில வருஷங்கள் கழிச்சு அனிதா பால்துரைன்னா யார்னே தெரியாம போயிரும். ஆனா, விருதுகளால இறந்த பிறகும் நான் அறியப்படுவேன்.

எதிர்பார்த்த அர்ஜுனா விருது... எதிர்பாராமல் வந்த பத்மஸ்ரீ!

விளையாட்டுத் துறையில பெண் களுக்கான சூழல் இப்போ எப்படி இருக்கு?

முன்பெல்லாம் விளையாட்டுல ஆண்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெண்களுக்குக் கிடைக்கலை. ஆண்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகைன்னா பெண்கள் போட்டிகளுக்கு 50,000 ரூபாய் இருக்கும். ஆண்களுக்கான போட்டிகள் பத்து நடந்தா பெண்கள் போட்டிகள் ஒன்றோ ரெண்டோதான் நடக்கும். ஆனா, இப்போ அதெல்லாம் மாறிடுச்சு. ஆண் பெண் இருவருமே சமம் என்கிற நிலைமை வந்திருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு, உன்னுடைய லட்சியம் என்னவோ அதைப் பார்னு சொல்ற ஆண்கள் அதிகரிச்சிருக் காங்க. பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிச்சிருக்கு. முனைப்போட களம் இறங்கினா போதும் அடிச்சுத் தூக்கிடலாம்.

உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?

கிராமப்புறங்கள்ல உள்ள பெண் களுக்குப் பயிற்சி கொடுத்து சிறந்த பேஸ்கட்பால் பிளேயர்களை உருவாக்கணும். அதுக்காக பேஸ்கட் பால் அசோசியேஷனோடு தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் அது நடக்கும்னு நம்புறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism