Published:Updated:

IPL 2022: "விருந்தை பாதியில் விட்டு விட்டு ஏலத்திற்கு விரைந்தேன்" சுவாரஸ்யம் பகிரும் சாரு ஷர்மா

IPL 2022

பல்வேறு விருது விழாக்களில் தொகுப்பாளராகவும் விளையாட்டு போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ள சாரு சர்மா ஐ.பி.எல் ஏலத்தினை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறை.

IPL 2022: "விருந்தை பாதியில் விட்டு விட்டு ஏலத்திற்கு விரைந்தேன்" சுவாரஸ்யம் பகிரும் சாரு ஷர்மா

பல்வேறு விருது விழாக்களில் தொகுப்பாளராகவும் விளையாட்டு போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ள சாரு சர்மா ஐ.பி.எல் ஏலத்தினை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறை.

Published:Updated:
IPL 2022

ஐ.பி.எல்-2022 தொடருக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12,13-ம் தேதிகளில் பெங்களூரு நகரில் நடைபெற்றது. ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் புதிதாக இணையவிருக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஏலத்தில் எடுத்து முடித்துள்ளன.

Charu Sharma
Charu Sharma

இந்த மெகா ஏலத்தின் ஆக்ஷனராக இங்கிலாந்தை சேர்ந்த ஹக் எட்மியட்ஸ் செயல்பட்டார். முதல் நாள் மதியம் 2 மணியளவில் இலங்கை வீரரான ஹசரங்கா ஏலத்தில் விடப்பட்டபோது ஆக்ஷனர் எட்மியட்ஸ் எதிர்பாராதவிதமாக மேடையிலேயே மயங்கி சரிந்தார். இதையடுத்து ஏலம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எட்மியட்ஸின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லையென்றும் குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணத்தினாலே அவர் மயங்கி விழுந்தார் என்றும் செய்திகள் வெளியாயின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சம்பவங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டிருந்த மெகா ஏலத்தை சாரு சர்மா தொடர்ந்து நடத்தினார். பல்வேறு விருது விழாக்களில் தொகுப்பாளராகவும் விளையாட்டு போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ள சாரு சர்மா ஐ.பி.எல் ஏலத்தினை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறை.

Charu Sharma
Charu Sharma

இந்த ஏலத்திற்கு தான் அழைக்கப்பட்டது குறித்த சுவாரசிய தகவலை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார் சாரு ஷர்மா. பெரும்பாலான சனிக்கிழமை பொழுதுகளில் கோல்ப் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார் சாரு சர்மா. ஆனால் ஏலம் நடைபெற்ற அன்று மும்பையிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் உணவருந்தி கொண்டிருந்தார் அவர். உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டதால் மெகா ஏலத்தை தொலைக்காட்சியில் அவர் பார்க்கவில்லை.

இதையடுத்து மதியம் 2 மணியளவில் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான ப்ரிஜேஷ் பட்டேல், சாரு சர்மாவை தொலைபேசியில் அழைத்து "எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் உடனடியாக ஐடிசி கார்டனிவிற்கு வரவேண்டும்" என கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். ஏலம் நடக்கும் இடத்திலிருந்து 10 நிமிட பயண தொலைவிலிருந்த சாரு சர்மா அடுத்த 15 நிமிடங்களில் ஐடிசி கார்டனியா சென்றடைந்தார். அங்கே எமியட்ஸ் உடல்நிலை குறித்து விளக்கப்பட்டு பிறகு ஏலத்தை சாரு ஷர்மாவே ஏற்று நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஒப்புக்கொண்ட சாரு ஷர்மா 2022-ம் ஆண்டு மெகா ஏலத்தை மிக சிறப்பாக நடத்தி முடித்தார்.

Charu Sharma
Charu Sharma

1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக ஸ்ப்ரிங்போர்டில் களமிறங்கியவர் சாரு. ஐ.பி.எல் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாக இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் . அந்த அணியின் மோசமான செயல்பாட்டால் அப்பதவியை விரைவிலேயே ராஜினாமா செய்த அவர் ப்ரோ கபடி லீக் தொடரின் இயக்குனராக பணிபுரிந்தார்.

உறவினர்களுடனான விருந்தின் பாதிலேயே ஏலத்திற்கு விரைந்த அவர் அந்நிகழ்வு முடிந்த பிறகே வீடு திரும்பியுள்ளார். அவரை கண்ட குடும்பத்தினர் "நீங்கள் எதற்கு ஓடினீர்கள் என்பது இப்போது தான் புரிகிறது அதனால் உங்களை மன்னித்து விடுகிறோம்" கூறியதாக சாரு சர்மா கூறியுள்ளார்.