Published:Updated:

குறுக்கு வழி... குறியீடுகள்... விளையாட்டில் முறைகேடு செய்த சீன ராணுவம்!

தொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

சீன ராணுவம்
சீன ராணுவம்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹனில் உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 20-ம் தேதி நடைபெற்ற ஓரியென்டீரிங் (Orienteering) போட்டியில் நடுத்தர தூரப் பிரிவில் பங்குபெற்ற சீன வீரர்கள் வரைபடம் மற்றும் திசைகாட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மீறிச் செயல்பட்டதால் சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் அவர்களைப் போட்டியில் பங்குபெற தடைவிதித்துள்ளது.

சீன ராணுவம்
சீன ராணுவம்

தொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பிரான்ஸ், போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா மற்றுமொரு நடுவர் கொடுத்த புகாரின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில், பார்வையாளர்களின் உதவியோடு சீன வீரர்கள் மட்டும் கண்டறியும் விதமாக குறுக்கு வழிகளையும் குறியீடுகளையும் ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!

இதை உறுதிசெய்த நடுவர்கள் சீனா முறையீடு செய்ததை ஏற்க மறுத்துள்ளனர். அதன்பின் நடந்த போட்டிகளில் அவர்கள் பங்கேற்க சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் தடைவிதித்துள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக வூஹனில் விளையாட்டு வீரர்களுக்கான கிராமம் ஒன்றை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது. முதன்முறையாக சீனாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கிவைத்தார்.

சீன ராணுவம்
சீன ராணுவம்

சீன ராணுவத்தின் மகத்துவத்தைப் வெளியுலகுக்கு பறைசாற்றவும் மற்ற ராணுவங்களோடு நல்லுறவு பேணவும் இப்போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மேலும், நடைபெற்ற முறைகேட்டை எந்தவொரு சீன ஊடகமும் வெளியிட மறுத்து வெற்றி பெற்ற நிகழ்வுகளை மட்டும் ஒளிபரப்பிக்கொண்டு வருகிறது.