Published:Updated:

``அணியையும், ரசிகர்களையும் எப்போதும் நேசிக்கிறேன்"- மான்செஸ்டர் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ. ( Clive Mason )

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

``அணியையும், ரசிகர்களையும் எப்போதும் நேசிக்கிறேன்"- மான்செஸ்டர் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ!

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

Published:Updated:
கிறிஸ்டியானோ ரொனால்டோ. ( Clive Mason )
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த  37 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் 'Golden Boot' விருதை மட்டும் 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ கடந்த ஆண்டுதான் மான்செஸ்டர் அணியில் இணைந்தார். இந்நிலையில்  மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர்  எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், சமீபத்திய நேர்காணல்  ஒன்றில் வெளிப்படையாகப்  பேசியிருந்தார். அதில் பேசிய அவர், "என்னை ஏன் எரிக் இவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எனக்கு உரிய மரியாதையையும் தருவதில்லை. நானும் அவருக்கு மரியாதை தர விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.   

ரொனால்டோவின் இந்தப்  பேட்டிக்கு பிறகு, அவரை உடனடியாக  மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் கூறிய நிலையில்  தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியும் உறுதி செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ட்விட்டர் பதிவில், "மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம். நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை நேசிக்கிறேன், ரசிகர்களையும் நேசிக்கிறேன், அது எப்போதும் மாறாது. இருப்பினும், ஒரு புதிய சவாலைத் தேடுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்கிறேன். இனி வரப்போகும் போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.