Published:Updated:

வார்னரிடம் டி-சர்ட் கேட்ட சிறுவன்; மார்னஸ் டி-சர்ட்டும் சேர்த்து வாங்கிக்கோ என்று பதிலளித்த வார்னர்!

டேவிட் வார்னர், அச்சிறுவன்

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டியின் நடுவே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வார்னரிடம் டி-சர்ட் கேட்ட சிறுவன்; மார்னஸ் டி-சர்ட்டும் சேர்த்து வாங்கிக்கோ என்று பதிலளித்த வார்னர்!

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டியின் நடுவே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
டேவிட் வார்னர், அச்சிறுவன்
T20 உலகக்கோப்பையை  தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும்,  ஆஸ்திரேலிய அணியும் நேற்று ( 17. 11. 2022)  மோதிக்கொண்டன. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 86 ரன்களும், டிராவிஸ் ஹெட் 69 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 80 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இதனிடையே, போட்டியின் நடுவே நடைபெற்ற ஒரு  சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

போட்டியைக் காண மைதானத்திற்கு வந்த சிறுவர் ஒருவர்,  “வார்னர் உங்களின் டி-சர்ட் எனக்கு கிடைக்குமா?” என்று எழுதி கேமரா முன் காண்பித்திருக்கிறார். இதனை  ஸ்க்ரீனில் பார்த்த வார்னர், சிரித்தபடி இன்னொரு பேப்பரில், “மார்னஸ் டி-சர்ட்டும் சேர்த்து வாங்கிக்கோ” என்று எழுதி அச்சிறுவனிடம் காட்டியிருக்கிறார். பின் அந்த சிறுவன் மார்னஸ் உங்கைளடைய  டி-சர்ட் கிடைக்குமா என்று எழுதி காட்டிய பிறகு, வார்னர் சிரித்துக் கொண்டே கட்டை விரலைக் காண்பித்து வரச்சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதன்பிறகு, வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சிறுவனுக்கு டெஸ்ட் போட்டியின் போது டி-சர்ட்டை பரிசளிப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.