Published:Updated:

அமித் ஷா பங்கேற்கும் விழாவில் `கோலி'க்கு புதிய கௌரவம் - டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் அசத்தல் முடிவு!

கலிலுல்லா.ச

டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் விராட் கோலியின் பெயரை பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒருபகுதிக்கு வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

virat kohli
virat kohli

கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்திருக்கிறார் விராட் கோலி. தொடர் சாதனைகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அவரது சாதனைகளை கணக்கில் கொண்டு, அவருக்குப் புதிய கௌரவத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளது டெல்லி கிரிக்கெட் சங்கம். பொதுவாக கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பாற்றி, சாதனை செய்த வீரர்களின் பெயர்களை, அவர்களின் சொந்த ஊர் மைதானங்களின் ஒருபகுதிக்கு வைத்து கௌரவிப்பது வழக்கம்.

 kohli
kohli

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில், இப்படியாக பல ஜாம்பவான்களில் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. கோலியின் பெயரையும் இந்தப் பட்டியலில் இணைக்க முடிவெடுத்துள்ளது டெல்லி கிரிக்கெட் சங்கம். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்து இங்கேதான் வேறுபடுகிறார் கோலி. பெரும்பாலும் வீரர்களின் ஓய்வுக்குப்பின்தான் அவரது பெயர்கள் மைதானத்தின் ஒருபகுதிக்கு சூட்டப்படும்.

விளையாடிக்கொண்டிக்கும் கோலியின் பெயரை மைதானத்தின் ஒருபகுதிக்கு சூட்டுவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெருமை இளம் வீரர் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒருபகுதிக்கு விராட் கோலியின் பெயரை சூட்டுவது தொடர்பாக பேசிய டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவர் ரஜட் ஷர்மா, ``கிரிக்கெட் உலகில் விராட் கோலியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாதது. பல்வேறு சாதனைகளையும், அடையமுடியாத கேப்டன்சி ரெக்கார்டுகளையும் உருவாக்கியதற்காக கோலியை கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

`ஹை கமிஷனுக்கு அலர்ட் கொடுத்த பி.சி.சி.ஐ!'- இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா?
indian team captain
indian team captain

இதை மதிக்கும் வகையில், மைதானத்தின் ஒருபகுதிக்கு அவரது பெயரை டெடிகேட் செய்ய முடிவுசெய்தோம். விராட் கோலி நிச்சயமாக டெல்லி கிரிக்கெட் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார் என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன்” என்றார். மேலும், ``டீம் இந்தியா ஒரு டெல்லி வீரரால் வழிநடத்தப்படுவது மட்டுமல்லாமல், ஒரு தொடக்க பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆகியோரை உள்ளடக்கியது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

முழு தேசிய கிரிக்கெட் அணியையும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் பாராட்டுவது டி.டி.சி.ஏ-வுக்கு பெருமை அளிக்கிறது” என்று அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஷர்மா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் அமித் ஷா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி, அமர்நாத் ஆகியோரின் பெயர்கள் ஏற்கெனவே சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.