Published:Updated:

`கே.எல் ராகுல் தவறவிட்ட கேட்ச்சை வாஷிங்டன் சுந்தர் பிடித்திருக்க வேண்டும்'- தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்
News
தினேஷ் கார்த்திக்

கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் வாஷிங்டன் சுந்தர் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

`கே.எல் ராகுல் தவறவிட்ட கேட்ச்சை வாஷிங்டன் சுந்தர் பிடித்திருக்க வேண்டும்'- தினேஷ் கார்த்திக்

கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் வாஷிங்டன் சுந்தர் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

Published:Updated:
தினேஷ் கார்த்திக்
News
தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட்  அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று (4.12. 2022) நடைபெற்றது.

வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்துக் கொண்டிருந்தபோது ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது. கடைசியில் வங்கதேச அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றிபெற்றது.


இந்தப் போட்டியில்  கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்தான்  இந்திய அணியின் தோல்விக்கு காரணம்  என்று அனைவரும் கூறி வரும் நிலையில் வாஷிங்டன் சுந்தர் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

கேட்சை தவறவிட்ட ராகுல்
கேட்சை தவறவிட்ட ராகுல்

இதுதொடர்பாக பேசிய தினேஷ் கார்த்திக், “இறுதிக் கட்டத்தில்  கே.எல் ராகுல் தவறவிட்ட கேட்ச்சை வாஷிங்டன் சுந்தர் பிடித்திருக்க வேண்டும் ஆனால் அவர் அதற்கு முயற்சிக்கவில்லை.  அவர் கேட்ச் பிடிக்க முயற்சிக்காததற்கு அங்கிருந்த லைட்  வெளிச்சம் காரணமாக இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் பந்தை பார்த்திருந்தால் கட்டாயம்  கேட்ச்சை  பிடிக்க வந்திருக்க வேண்டும். அந்த கேள்விக்கு சுந்தர் தான் பதில் அளிக்கவேண்டும். நான் நினைக்கிறேன் நேற்று  பீல்டிங்கின் சிறந்த நாளும் அல்ல மோசமான நாளும் அல்ல." என்று  கூறியிருக்கிறார்.