Published:Updated:

‘ஊ சொல்றியா மாமா’ பாடல்... ஐட்டம் பாடலை கலாசாரம் ஆக்கிவைத்திருக்கும் சினிமா!

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சமந்தா

#Avaludan

வெளிவரவிருக்கும் `Pushpa’ திரைப்படத்தின் `ஊ சொல்றியா மாமா’ பாடல், சமீபத்தில் இணையத்தில் வைரலாகி, நிறைய விவா தங்களையும் எழுப்பியது. இதுவரை பெண் களை பாலியல் பண்டமாக வர்ணிப்பதே ஐட்டம் பாடல்களுக்கான இலக்கணம்(!) என்று வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், இப்பாடல் ஆண்களைச் சாடும் வரிகளுடன் களமிறக்கப்பட, ‘இது ஆண்களின் மனதைப் புண்படுத்துகிறது’ என்று பாடலுக்குக் தடை கோரிய சம்பவங்களும் அரங்கேறின.

‘ஐட்டம் சாங்’ என்ற சொல்லாடல், அந்த வரிகள் பேசும் விஷயங்கள், இதுபோன்ற பாடல்கள் குறித்த உங்கள் கருத்துகளை #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் பகிருங்கள் என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்த கமென்ட்கள் இங்கே...

Sethu Muthu

‘அடிடா அவள உதடா அவள’, ‘வொய் திஸ் கொலவெறிடி’, ‘கிளப்புல மப்புல’, பீப் சாங் எனப் பெண்களை அவமானப்படுத்தக் கூடிய வகையிலான ஆணாதிக்கப் பாடல் வரிகளை எல்லாம் இது வரை பலரும் என்ஜாய் செய்தார்கள்தானே? ஆண்களைச் சாடும் வரிகள் மட்டும் ஏற்புடையதல்லாமல் போகிறதா இவர்களுக்கு?

Devi Ignatius

ஐட்டம் பாடல்களை இயக்குபவர்கள் முதல் அதற்கு நடனமாடு பவர்கள் வரை ஊதியம் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். ஆனால், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் எனப் பொதுப் போக்குவரத்தில் செல்லும் பெண்கள்தான் இந்தப் பாடல்களால் பாதிக்கப்படுவார்கள். ஆண்கள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை தரும் வழிகளில் ஐட்டம் பாடல்களும் ஒன்று. பெண்களுக்கு இப்போது இருக்கும் எண்ணற்ற பாதுகாப்புக் குறைபாடுகளுள் ஒன்றாக இதுபோன்ற பாடல்களும் சேராமல் இருக்க, அந்தப் பொறுப்புணர்வுடன் திரைப் பாடல் வரிகள் எழுதப்பட வேண்டும்.

திருமதி கவிதையின் ரசிகை

முன்னர் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் ஐட்டம் பாடல் இடம் பெற்றதுபோய், இப்போதெல்லாம் அப்பாடல் இல்லாத படமே இல்லை என்றாகிவிட்டது. யாருக்கும் தெரியாமல் இதுபோன்ற பாடல்களை ரசித்தவர்கள், இப்போது அதை பிளேலிஸ்ட்டில் தேடியெடுத்து நடுவீட்டில் வைத்துப் பார்க் கிறார்கள்.

vikatan
vikatan

Shree Maha Shree

பொதுவாக ஐட்டம் பாடல்களில், பெண்ணை ஆபாசமான வரிகளில் ஆண் பாடுவார். பின்னர், ‘என் செல்லப் பேரு ஆப்பிள்’, ‘அழகா பொறந்து புட்ட ஆறடி சந்தனக்கட்ட’ எனப் பெண்ணையே தன்னை பாலியல் பண்டமாக வர்ணிக்க வைத் தார்கள். அந்த வரிசையில், ஆண்களை வெளுத்து வாங்கும் விதமாக முதன்முறையாக வெளிவந் திருக்கும் ‘ஊ சொல்றியா’... சற்றே வித்தியாசம்.

Prithi Gal

இதுவும் கமர்ஷியலுக்காக எழுதிய பாடல் அவ்ளோதான்... சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு!

Selvi Karthick

ஆண்களுக்கு வந்தால் ரத்தம், பெண்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?!

Kanikannan

பெண்களை ‘ஐட்டம்’ என்று குறிப்பிடும் இந்தப் பெயரே கண்டனத்துக்குரியது. அதை ஒரு கலாசாரமாகவே ஆக்கிவைத்திருக்கிறது சினிமா... கொடுமை.