Published:Updated:

``இந்தியா Vs பாகிஸ்தான் இறுதிப் போட்டியை பார்க்க விரும்பவில்லை"- இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசியிருக்கிறார்.

``இந்தியா Vs பாகிஸ்தான் இறுதிப் போட்டியை பார்க்க விரும்பவில்லை"- இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசியிருக்கிறார்.

Published:Updated:
ஜாஸ் பட்லர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலகக்கோப்பைத் தொடர் தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இன்று (9.11.2022) சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் அணி மோதவுள்ள நிலையில், நாளை(10.11.2022) அடிலெய்டு மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத விருக்கின்றது.  இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதையே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூட,” 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில்    இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. மீண்டும் அதே  போன்ற விறுவிறுப்பானப் போட்டியை மக்கள் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். 

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்நிலையில் நாளை இந்தியா- இங்கிலாந்து இடையேயான போட்டி நடைபெறவுள்ள நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது "நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை. எனவே அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்," என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார். தற்போது இது பேசுப்பொருளாக மாறியுள்ளது.