1. ஆஸ்திரேலியாக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தின் இறுதியில் பேசிய மெஸ்ஸி பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்த அணிகளை வெல்வது சற்று கடினமாக இருக்கும் என்று கூறினார்.

2. பிரேசில்-தென் கொரியா இடையான ஆட்டத்தில், முதல் பாதியிலேயே பிரேசில் வீரர்களான வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து 4-1 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்தனர். இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

3. சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பவர் பிரேசில் ஜாம்பவான் பீலே(வயது 81). புற்றுநோயில் பாதிக்கப்பட்ட பீலே, கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு புற்றுநோயிலிருந்து மீண்டார். தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல அணிகளின் முன்னணி வீரர்களும், ரசிகர்களும் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரேசில் அணியின் வீரர்கள், 'மருத்துவமனையிலிருந்து பிரேசிலின் ஆட்டத்தைப் பார்ப்பேன்' என்று நெகிழ்ச்சியாக் கூறியிருந்த பீலேவிற்கு மரியாதை செய்து, அவர் நலம் பெற வேண்டும் என்று பிரேசில் வீரர்கள் பிரார்த்தனை செய்தனர்.

4. ஜப்பான் -குரேஷியா அணிகள் இடையானப் போட்டியின் முதல் பாதியில், 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து 1-0 என ஜப்பான் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றனர். இதையடுத்து கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

5.ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பெனால்டி சூட் அவுட்டில் குரோயேஷிய கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச் ஜப்பானிய வீரர்களின் 3 ஷாட்களை ரொம்பவே அற்புதமாக சேவ் செய்திருந்தார். ஹீரோ ஆப் தி மேட்ச்சே இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.