Published:Updated:

Chess Olympiad: அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு!

Chess Olympiad

ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கும், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது தமிழக அரசு.

Chess Olympiad: அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு!

ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கும், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது தமிழக அரசு.

Published:Updated:
Chess Olympiad
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் செஸ் ஒலிம்பியாட் தொடர் இவ்வருடம் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது. செஸ் விளையாட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ‘ஒலிம்பியாட்’ இவ்வருடம் ரஷ்யாவில் தான் நடத்த திட்டமிட்டது சர்வதேச செஸ் கூட்டமைப்பு.

ஆனால் ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக இத்தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. சர்வதேச அளவிலான செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளும் தொடர் என்பதால் இத்தொடரை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து அதற்கான வேலைகளைச் செய்துவருகிறது தமிழக அரசு.

Chess Olympiad
Chess Olympiad

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கும், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது தமிழக அரசு. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செஸ் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தி, இதுபோல ஒரு மாவட்டத்திற்கு 8 பேர் தேர்வு செய்யப்பட்டு, 38 மாவட்டங்களில் 304 மாணவர்களை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு. இதில் 152 பேர் மாணவர்களும், 152 பேர் மாணவிகள் அடங்குவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் முதற்கட்டமாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தென்காசியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையேயான போட்டியைத் தொடங்கி வைத்தார். 1 முதல் 12 வகுப்பு வரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெற்றவர்களை சென்னை அழைத்து வரச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளவிருக்கிறது. இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது மாநில அரசு. இதன் மூலம் மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயல்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் எல்லாம் மேம்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.