உலக பாரா பாட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் மானஸி ஜோஷி. இவர், ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தன் கால் ஒன்றை இழந்த மானஸி, அதற்குப் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்திக்கொண்டு பாட்மின்டன் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இப்போது அவருக்கு இந்தத் தங்கத்தைப் பெற்றுத்தந்தி ருக்கின்றன. அடுத்து 2020 டோக்கியோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித்தரப்போவதாகச் சொல்கிறார் மானஸி! நிச்சயம் ஜெயிப்பீங்க!

இந்த முறை தீபாவளிக்குச் சரவெடியாக மூன்று பெரிய திரைப்படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிக்கும் பிகில் திபாவளிக்கென்றே திட்டமிட்டுதான் படப்பிடிப்பையே தொடங்கினார்கள், இப்போது பிகிலோடு கார்த்தி நடிக்கும் கைதியும், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழனும் வெளியாக வுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. தீபாவளிக்கு ட்ரிபிள் விருந்து!

Economist Intelligence Unit உலகெங்கும் உள்ள முக்கியமான 60 நாடுகளின் பிரதான நகரங்களைப் பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதனடிப்படையில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் டோக்கியோ இருக்கிறது. இதே பட்டியலில் மும்பை 45வது இடத்திலும் டெல்லி 52வது இடத்திலும் இருக்கின்றன. பாதுகாப்பை பலப்படுத்துங்க!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தின் இளவேனில். பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பத்து மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றுள்ளார்.

20 வயதாகும் இளவேனில் இப்போது வாழ்வது குஜராத்தில். கடந்த ஐந்தாண்டுகளாக, தீவிரமாகத் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏற்கெனவே ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ் காட்டிட்டம்மா!

சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படமான ‘இன்ஷா அல்லா’வில் சல்மான்தான் ஹீரோ என அறிவிப்புகள் வந்தன. இந்தப் படத்தில் ஆலியா பட்டோடு நடிக்கப்போவதாக சல்மானும் சொல்லியிருந்தார். படம் அடுத்த ரம்ஜான் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது சல்மான் சம்பளப் பிரச்னையால் படத்திலிருந்து விலகிவிட்டார். சல்மான் போனால் என்ன என்று சஞ்சய் லீலா பன்சாலி, தன் நண்பர் ஷாருக்கானை வைத்து அதே படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். சல்மான் இல்லைன்னா ஷாருக்!

கர்நாடகாவே ஷாக்கில் இருக்கிறது. முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் துணைமுதல்வராக பா.ஜ.க-வின் லக்ஸ்மன் சாவடியை அறிவித்தார்.

இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. இந்த லக்ஸ்மன் சாவடி கர்நாடக சட்டமன்றத்திலேயே அமர்ந்து ஆபாச வீடியோ பார்த்து வீடியோவும் கையுமாகச் சிக்கியவர். அவரைப்போய் துணைமுதல்வர் ஆக்கிட்டீங்களே எடியூரப்பா, இது தகுமாப்பா எனக் கதறிக்கொண்டிருக்கிறார்கள் கர்நாடக மக்கள். பிட்டு ஜனதா பார்ட்டி!

இந்திராகாந்தியின் பயோபிக்கையும் பாலிவுட் விட்டுவைக்கவில்லை. இம்முறை திரைப்படமில்லை, வெப்சீரிஸ். வித்யாபாலன்தான் இதில் இந்திராவாக நடிக்கிறார்.

‘`இது அரசியலைத் தாண்டிய இந்திராவின் வாழ்வைப் பதிவு செய்யும் தொடராக இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார் வித்யா. பயோபிக் ஸ்டார்!

இனி யாராலும் ஜோக்கர் கதாபாத்திரத்தைச் செய்யவே முடியாது என்கிற அளவுக்கு `டார்க் நைட்’ படத்தில் நடித்துத் தீர்த்திருந்தார் ஹீத் லெட்ஜெர். இப்போது அவரையே தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு அதே பாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருக்கிறார் வாக்கீன் பீனிக்ஸ்.

பேட்மேன் காமிக்ஸில் தோன்றுகிற வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை மட்டுமே ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட படம் `ஜோக்கர்.’ இதில் நாயகனாக நடித்திருக்கிறார் பீனிக்ஸ். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக பீனிக்ஸின் நடிப்பைப் பார்த்து மெர்சலாகியிருக்கிறது ஹாலிவுட். `பீனிக்ஸுக்கு ஆஸ்கர் பார்சல் பண்ணுங்கப்பா’ எனப் பரபரப்பாகிவிட்டார்கள். தெய்வீக சிரிப்பய்யா!