Published:Updated:

"உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்..." -தீபக் சஹார்

தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ்

டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் இன்று இரவு நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தோனி, விராட் கோலி, மற்றும் பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்..." -தீபக் சஹார்

டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் இன்று இரவு நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தோனி, விராட் கோலி, மற்றும் பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ்

வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாமல் போனது. கடந்த ஆண்டும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலராக விளையாடி வந்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியின் நிறைவில் தன் காதலியான ஜெயா பரத்வாஜிற்கு மைதானத்திலேயே புரப்போஸ் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகக் காதலித்து வந்தனர். ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும், தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஐடிசி மயூரா ஹோட்டலில் நடந்தது.

இந்நிலையில் தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ் இருவரின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த தீபக் சஹார் தனது காதல் வரிகளையும் அதில் குறிப்பிட்டு, `உன்னை முதன்முதலில் சந்தித்தபோதே நீதான் எனக்குச் சரியானவள் என்பதை நான் உணர்ந்தேன். நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ஒன்றாக அனுபவித்து மகிழ்ந்தோம். அதேபோல உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.’ `இது என் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று.’ `எல்லோரும் உங்கள் ஆசிகளை எங்களுக்கு வழங்குங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism