Published:Updated:

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

பாராலிம்பிக்
பிரீமியம் ஸ்டோரி
பாராலிம்பிக்

இதற்கு முன்புவரை ஒரு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 20 வீரர்களுக்கு மேல் அனுப்பியதே இல்லை. அதிகபட்சமாக, ரியோவுக்கு 19 அத்லெட்கள் சென்றிருந்தனர்.

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

இதற்கு முன்புவரை ஒரு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 20 வீரர்களுக்கு மேல் அனுப்பியதே இல்லை. அதிகபட்சமாக, ரியோவுக்கு 19 அத்லெட்கள் சென்றிருந்தனர்.

Published:Updated:
பாராலிம்பிக்
பிரீமியம் ஸ்டோரி
பாராலிம்பிக்

பாராலிம்பிக் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. ஒரே தொடரில் 19 பதக்கங்கள் வென்றது இதுவரை இல்லாத மகத்தான சாதனை.

வழக்கம்போல் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என பாராலிம்பிக்ஸ் அரங்கில் ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறது சீனா. இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்தியாவின் செயல்பாடு நிச்சயம் சாதாரணமானது இல்லை. உற்று நோக்கப்படவேண்டியது; கொண்டாடப்படவேண்டியது.

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வாங்கியவர்கள் யார் யார் என்று கேட்டால் இதுநாள் வரை படபடவென்று சொல்லிவிடுவோம். காரணம், குறைவான வெற்றியாளர்கள் என்பதால் நமக்கு அவர்கள் பெயர்கள் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எளிதில்லை. 17 சூப்பர் ஸ்டார்கள் டோக்கியோவில் இந்தியக் கொடி ஏறுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இதற்கு முன்புவரை ஒரு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 20 வீரர்களுக்கு மேல் அனுப்பியதே இல்லை. அதிகபட்சமாக, ரியோவுக்கு 19 அத்லெட்கள் சென்றிருந்தனர். ஆனால், இந்த முறை கிட்டத்தட்ட அதைவிட மும்மடங்கு வீரர்கள் டோக்கியோ சென்றனர்.

எப்போதும் தடகளத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் இந்திய பாராலிம்பிக் அணியில் இம்முறை துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்ற விளையாட்டுகளிலிருந்தும் பதக்கங்கள் கிடைத்தன. முதல் முறையாக நடத்தப்பட்ட பாரா பேட்மின்டன் போட்டிகளில் 4 பதக்கங்கள் கிடைத்தன.

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தினார். அதேபோல், 40 வயது சீனியர் துப்பாக்கி சுடுதல் வீரர் சிங்கராஜ் அதானாவும் 2 பதக்கங்கள் (1 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றார்.

இவர்கள் இருவரும் இந்தத் தொடரிலேயே 2 பதக்கங்கள் வெல்ல, ஒட்டுமொத்தமாக பாராலிம்பிக்ஸில் தன் மூன்றாவது பதக்கத்தை வென்றார் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா. 2004 கிரீஸ் பாராலிம்பிக்கிலும், ரியோ பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்த அவர், டோக்கியோவில் வெள்ளி வென்றார்.

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

ரியோவில் தங்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருந்த உயரம் தாண்டுதல் வீரர் தங்கவேலு மாரியப்பன், இம்முறை நூலிழையில் தன் இரண்டாவது தங்கத்தைத் தவறவிட்டார். தொடக்க விழாவில் கொடியேந்தும் கௌரவம் கிடைத்திருந்தும், கொரோனாத் தொற்று இருப்பவருடன் தொடர்பில் இருந்ததாக, தனிமைப்படுத்தப்பட்டார். இருந்தாலும் அதன்பின் சிறப்பாகச் செயல்பட்டு, வெள்ளி வென்று இம்முறையும் இந்தியக் கொடி ஏற்றப்படுவதற்குக் காரணமாக இருந்தார் மாரியப்பன்.

மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!
மைல்கல் சாதனைகள்... மகத்தான வெற்றி!

டோக்கியோ சென்ற 54 வீரர்களில், 17 பேர் பதக்கம் வென்றிருக்கிறார்கள். வட்டு எறிதல் வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இருபதாக இருந்திருக்கும்.

இதுவரை இப்படியொரு ஒலிம்பிக்கை இந்திய ரசிகர்கள் பார்த்ததில்லை. அப்படியொரு செயல்பாட்டை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் செயல்பாட்டின் மூலம் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் மீது கவனம் செலுத்தப்படும் என்பது மிகப்பெரிய ஆறுதல். ஆனால் அதைவிட முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள்மீதும், அவர்கள் வாழ்க்கைமீதும் நம் கவனம் திரும்புவது அவசியம்!