Published:Updated:

"எலான் Swiggy-யையும் சேர்த்து வாங்குங்கள்!" - ஷுப்மன் கில்லின் கேலியும் நெட்டிசன்களின் கலாய்ப்பும்!

ஷுப்மன் கில்

எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய நிலையில் "ஸ்விக்கியையும் சேர்த்து வாங்குங்கள் டெலிவரி சரி இல்லை" என ட்விட் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்.

"எலான் Swiggy-யையும் சேர்த்து வாங்குங்கள்!" - ஷுப்மன் கில்லின் கேலியும் நெட்டிசன்களின் கலாய்ப்பும்!

எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய நிலையில் "ஸ்விக்கியையும் சேர்த்து வாங்குங்கள் டெலிவரி சரி இல்லை" என ட்விட் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்.

Published:Updated:
ஷுப்மன் கில்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், ட்விட்டரின் மொத்த பங்குகளையும் வாங்குவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25-ல் ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளையும் வாங்கினார்.

இந்த நிலையில் ட்விட்டரில் என்ன மாற்றங்களெல்லாம் வரும் என்று சமூக வலைதளங்களில் உரையாடல்கள் நடந்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் பலர் வேடிக்கையாக எலான் இலங்கையை வாங்கினால் நன்றாக இருக்கும், அமேசானை வாங்கினால் நன்றாக இருக்கும் என சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீரருமான ஷுப்மன் கில், எலான் மஸ்கிடம் ஸ்விக்கி நிறுவனத்தை வாங்கி நல்ல டெலிவரி சேவையை வழங்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்த ஷுப்மன் கில், "எலான் மஸ்க், தயவுசெய்து ஸ்விக்கியை வாங்குங்கள். அப்போதுதான் அவர்கள் சரியான நேரத்தில் டெலிவரி செய்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். கில்லின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கமென்ட் செய்து வரும் நெட்டிசன்கள், 'டி20-யில் ஷுப்மன் கில்லின் பேட்டிங் வேகத்தை விட ஸ்விக்கியின் டெலிவரி வேகம் எவ்வளவோ பரவாயில்லை' என்று வேடிக்கையாகக் கலாய்த்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism