இந்தியா-இலங்கைக்கு அணிகளுக்கு இடையான இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று தர்மசாலாவில் நடைபெற்றது. ரோஹித் தமைமையில் இப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இப்போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராகக் களமிறங்கினார் இஷான் கிஷன். அப்போது மூன்றாவது ஓவரில் குமார் வீசிய இரண்டாவது பந்தில் எதிர்பாராதவிதமாக வந்த பவுன்சரை இஷான் அடிக்க முயன்ற போது பந்து ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இஷான் மீண்டும் தொடர்ந்து விளையாடி பின்னர் போட்டி முடிந்த பிறகு காங்க்ராவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஸ்கேன் செய்து பார்த்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அதே போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் பேட்மேன் தினேஷ் சண்டிமாலுக்கும் விரலில் அடிப்பட்டதன் காரணமாக இஷான் கிஷன் சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கூறும் மருத்துவர் ஷுபம், CT ஸ்கேன் செய்து பார்த்ததில் இஷானுக்கு தலையில் அடிபட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிக்சை அளித்தது வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இஷான் சிச்சைபெற்று வரும் அதே மருத்துவமனையில் தான் இலங்கை அணி வீரர் தினேஷ் சண்டிமாலுக்கும் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.