Published:Updated:

`பளு தூக்கும் விளையாட்டுன்னா உசுரு!’- தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ்ஐ

தொடக்கம் முதல் தற்போது வரை அனுராதா கலந்துகொண்ட மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில், தோல்வி என்பதே கண்டதில்லை. காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்துகொண்டே பளு தூக்கும் போட்டிகளில் கலந்துவந்தார்.

பெண் எஸ்ஐ அனுராதா
பெண் எஸ்ஐ அனுராதா

தஞ்சாவூரில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அனுராதா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரை பலரும் பாரட்டிவரும் நிலையில், 'பளு தூக்கும் விளையாட்டுனா அவருக்கு உசுரு' என அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சிபொங்கத் தெரிவித்தனர்.

பெண் எஸ்.ஐ அனுராதா
பெண் எஸ்.ஐ அனுராதா

தஞ்சாவூரில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவருகிறார் அனுராதா. புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப்போட்டியில் பளு தூக்கும் போட்டியில், இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். காவல்துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அனுராதாவுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அனுராதாவின் தம்பி மாரிமுத்துவிடம் பேசினோம், ``எங்க அப்பா, நாங்க சின்ன வயசா இருக்கும்போதே விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தில் கடும் வறுமை. எங்க அம்மா கூலி வேலைபார்த்துதான் எங்களைப் படிக்க வச்சாங்க. இந்த நிலையில், பள்ளியில் படிக்கும்போதே அனுராதா விளையாட்டின்மீது அதிக ஆர்வமாக இருந்தார். இதனால் அவர் படிப்புடன் சேர்த்து விளையாட்டையும் கவனித்துவந்தார். பின்னர், பளு தூக்கும் விளையாட்டின் மீதும் அவருக்கு ஆர்வம் வந்தது.

`பளு தூக்கும் விளையாட்டுன்னா உசுரு!’- தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ்ஐ

இதைத் தொடர்ந்து பளு தூக்கும் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். தொடக்கம் முதல் தற்போது வரை அனுராதா கலந்துகொண்ட மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில், தோல்வி என்பதே கண்டதில்லை. காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்துகொண்டே பளு தூக்கும் போட்டிகளில் கலந்துவந்தார்.

இதற்கு, காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு, மகளிருக்கான 83 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். அக்கா ஊர் திரும்பியபோது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தது எங்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

`பளு தூக்கும் விளையாட்டுன்னா உசுரு!’- தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ்ஐ

இதேபோல், தஞ்சாவூரில் காவல்துறை சார்பில் அனுராதாவுக்கு பாராட்டு விழா நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகள் பலர் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசியதுடன், ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் கொடுத்தனர். தான் சார்ந்த துறையிலேயே பாராட்டு விழா நடத்தியது அனுராதாவுக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது.

இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் தெற்காசியப் போட்டியில், பளு தூக்கும் போட்டியில் விளையாட இந்திய அணி சார்பில் கலந்துகொண்டார். பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில், 87 கிலோ எடைப்பிரிவில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இதன்மூலம், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் அனுராதா பெருமை சேர்த்துள்ளார் எனப் பலரும் பாராட்டுகிறார்கள்.

`பளு தூக்கும் விளையாட்டுன்னா உசுரு!’- தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ்ஐ

மேலும், தமிழ்நாடு சார்பாகப் பெண்கள் பிரிவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அடைந்திருக்கிறார். ஆரம்பத்தில் நாங்க பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. தங்கம் வென்றதும் அவ்வளவு சந்தோஷமாக போன் செய்து எங்களிடம் தெரிவித்தார். பளு தூக்கும் விளையாட்டுதான் அவருக்கு உசுரு. அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதுதான் என் லட்சியம் என அனுராதா மனம் முழுக்க நம்பிக்கையுடன், முகம் முழுக்க புன்னகையுடன் கூறினார். தங்கம் வென்றதற்கு பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள். இந்த நேரத்தில் இதற்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.