ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பெண்களுக்கான 81-வது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியில் உள்ள கிங் அத்லெட்டிக்ஸ் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டிகள் கடந்த 21-ம் தேதி தொடங்கின.

அகில இந்திய தடகள போட்டியில் நெல்லை மாணவி கிரேசினா மெர்லி கலந்துகொண்டார். நெல்லை மனோன்மாணியம் சுந்தரனார் பலகலைக்கழக மாணவியான இவர் தடகளப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.84 மீட்டர் தண்டினார். அதன் மூலம் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
உயரம் தாண்டும் போட்டியில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற கிரேசினா மெர்லி, 1.84 மீட்டர் தாண்டியதன் மூலம் புதிய பல்கலைக்கழக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த தேவசனா ஏஞ்சல் என்பவர் 1.83 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்திருந்தார்.

கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவசனா ஏஞ்சலினா படைத்திருந்த பழைய சாதனையை நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நெல்லை மாணவி முறியடித்துள்ளார். அவருக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.