Published:Updated:

தோனி: "நான் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல" - ஜெர்சி எண் 7 -ஐ தேர்தெடுத்ததுக்கான காரணம் இதுதான்!

தோனி

2022 டாடா ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் ஏன் ஜெர்சி எண் 7-ஐத் தேர்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

தோனி: "நான் மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல" - ஜெர்சி எண் 7 -ஐ தேர்தெடுத்ததுக்கான காரணம் இதுதான்!

2022 டாடா ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் ஏன் ஜெர்சி எண் 7-ஐத் தேர்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

Published:Updated:
தோனி

2022 ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 26-ல் தொடங்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெர்சி எண் 7-ஐ தான் தேர்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். சச்சினின் ஜெர்சி எண் 10 என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்று. அதையடுத்து அதிகம் பேசப்பட்ட ஜெர்சி எண் எதுவெனில் அது தோனியின் ஜெர்சி எண் 7 தான். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, ’ ஆரம்பத்தில் எல்லோரும் 7 என்பது என் அதிர்ஷ்ட என்று நினைத்தார்கள். ஆனால் நான் அந்த எண்ணை தேர்தெடுத்தற்கான காரணம் சாதாரணம் தான். நான் ஜூலை மாதம் 7-ம் தேதியில் பிறந்தேன், எனவே அந்த நாள் ஏழாவது மாதம் ஏழாம் தேதியில் வருகிறது. இந்த காரணத்திற்காகவே நான் என் ஜெர்சி எண்ணை 7 என வைத்துக்கொண்டேன் எனக் கூறினார்.

தோனி
தோனி

மேலும் `நான் எண்கள் குறித்த மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல, ஆனால் எண் 7 என்பது என் இதயத்திற்கு நெருக்கமான எண்' என்று கூறியிருந்தார். உடற்தகுதி பற்றிக் கூறிய தோனி, ’உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க மந்திரம் ஏதும் இல்லை. கடின உழைப்பும் பயிற்சியும் தான் அதற்கு காரணம் ’ என்றும் ‘என் பள்ளி நாட்களில் இருந்ததுபோல் இன்றில்லை. இன்றைய மாணவர்கள் டிஜிட்டல் உலகத்தில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாமல் இணையதளங்களில் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்’ என்றும் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism