Published:Updated:

"என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்!" - ரசிகர்களின் இதயங்களை வெல்லும் தோனி!

தோனி, லாவண்யா பிலானியா

தோனி, தனது தீவிர ரசிகர் ஒருவரை தீடீரெனச் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். இதுபற்றி விவரித்த அந்த ரசிகர் தோனியின் இந்தச் சந்திப்புக் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

"என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்!" - ரசிகர்களின் இதயங்களை வெல்லும் தோனி!

தோனி, தனது தீவிர ரசிகர் ஒருவரை தீடீரெனச் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். இதுபற்றி விவரித்த அந்த ரசிகர் தோனியின் இந்தச் சந்திப்புக் குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
தோனி, லாவண்யா பிலானியா

தோனி... சிறந்த கேப்டன், சிறந்த விக்கெட் கீப்பர், ஃபினிஷர் என்பதையெல்லாம் தாண்டி கிரிக்கெட் ரசிகர்களுடன் ஒரு உணர்வுப் பூர்வமான பந்தம் கொண்டவர். மைதானத்தில் எப்படி தீடீர் ட்விஸ்ட் மூலமும் அறிவிப்புகள் மூலமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுப்பாரோ, அதுபோல் தன் இயல்பு வாழ்விலும் தோனி எப்போதும் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தனது தீவிர ரசிகர் ஒருவரை தீடீரெனச் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

தோனியின் தீவிர ரசிகரான லாவண்யா பிலானியா ஒரு மாற்றுத் திறனாளி. இவர் ராஞ்சி விமான நிலையத்தில் தோனியை எதிர்பாராத விதமாகப் பார்த்துள்ளார். அப்போது லாவண்யா பிலானியாவைப் பார்த்த தோனி அவரைச் சந்தித்து நெகிழ்ச்சியாகப் பேசி தனது ஆட்டோகிராப்பைப் பரிசளித்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படத்தைப் பகிர்ந்த லாவண்யா, "இந்தச் சந்திப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர் அன்பானவர், இனிமையானவர், கனிவாக பேசுபவர். அவர் என் பெயரென்ன என்று கூறி கைகளைக் குலுக்கி என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் கணம் நான் ஆசீர்வதிக்கப்பட்டதைப் போல் உணர்தேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், "அவருடன் பேசியதை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கமாட்டேன்" என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இதை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism