Published:Updated:

விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணி 50 ஓவர்களில் 506 ரன்கள்; சாதனை படைத்த ஜெகதீசன்!

விஜய் ஹசாரே; ஜெகதீசன்

தொடர்ந்து ஐந்து சதங்கள், 114 பந்துகளில் இரட்டை சதம் என 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்த தமிழக வீரர்...!

விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணி 50 ஓவர்களில் 506 ரன்கள்; சாதனை படைத்த ஜெகதீசன்!

தொடர்ந்து ஐந்து சதங்கள், 114 பந்துகளில் இரட்டை சதம் என 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்த தமிழக வீரர்...!

Published:Updated:
விஜய் ஹசாரே; ஜெகதீசன்
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 38 அணிகள் என இந்தியாவின் பல்வேறு மாநில அணிகள் பங்குபெற்றுள்ளன.

ந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்த மாதம் நவம்பர் 12ம் தேதி தொடங்கி டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் அதிரடியாக விளையாடி வரும் தமிழக அணி, இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில், ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தமிழக அணி மற்றும் அருணாச்சல பிரதேச அணிக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங்கில் களம் இறங்கிய தமிழக அணி அதிரடியாக விளையாடி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்து விஜய் ஹசாரே டிராபி தொடரில் லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட் பிரிவில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்து சதங்கள் அடித்த தமிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன், இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் 76 பந்துகளில் தனது முதல் சதத்தையும், 38 பந்துகளில் அடுத்த இரண்டாவது சதத்தையும் எட்டி 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட் பிரிவில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதுவரை லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான அலி பிரவுனின் 268 ரன்கள் எடுத்து கடந்த இருபது வருடங்களாக முன்னிலையில் இருந்து வந்தார். தற்போது, 277 ரன்களைத் தட்டித் தூக்கியுள்ள தமிழக வீரர் ஜெகதீசன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது, இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் அலி பிரவுனின் (268) இரண்டாம் இடத்திலும், இந்திய வீரர் ரோஹித் சர்மா (264) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.