Published:Updated:

"கட்டுப்பாட்டை மீறி நான் எது சாப்பிட்டாலும் அதைப் பயிற்சியில் சரி செய்து விடுவேன்" -நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா ஓய்வு காலத்தில் தனது உடல் எடை சற்று அதிகரித்துள்ளது என்றும் உணவு மற்றும் உடல் பயிற்சி குறித்த தனது கட்டுப்பாடுகள் குறைந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற 24 வயதாகும் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டு தீபாவளியைத் தனது குடும்பத்துடன் கொண்டாடினார். ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருக்கும் நீரஜ் சோப்ரா இந்த ஓய்வு காலத்தில் தனது உடல் எடை சற்று அதிகரித்துள்ளது என்றும் உணவு மற்றும் உடல் பயிற்சி குறித்த தனது கட்டுப்பாடுகள் குறைந்து விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், மீண்டும் பயிற்சி களத்திற்குத் திரும்புவதாகக் கூறியுள்ளார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

இது பற்றிக் கூறிய அவர், "ஒலிம்பிக்கிற்குப் பிறகு, நான் உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த கட்டுப்பாட்டை இழந்து உடல் எடை அதிகரித்துள்ளேன். எனவே தற்போது இதைச் சரிசெய்து கட்டுப்பாட்டுடன் இருக்கத் தொடங்கியுள்ளேன். அதுமட்டுமின்றி பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுகிறோம் என்ற வருத்தம் அப்போது இருக்காது" என்று கூறினார். மேலும், "கட்டுப்பாட்டை மீறி நான் எது சாப்பிட்டாலும் அடுத்த நாள் பயிற்சியின்போது எனது பயிற்சியாளர் அதற்குத் தக்க பயிற்சியும் அளித்துவிடுவார். உங்களை நீங்கள் சரியான கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால்தான் களத்தில் நீங்கள் நினைத்தபடி நன்றாக விளையாட முடியும்" என்று கூறினார்.