Published:Updated:

ஸ்வீடனில் வெள்ளிப் பதக்கம்; தனது சாதனையை தானே முறியடித்த நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ரா

ஸ்வீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்வீடனில் வெள்ளிப் பதக்கம்; தனது சாதனையை தானே முறியடித்த நீரஜ் சோப்ரா!

ஸ்வீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

Published:Updated:
நீரஜ் சோப்ரா

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ், 2016 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். உலக தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையின் சொந்தக்காரர் இவர். பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்குத் தங்கம் வாங்கி பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பங்கேற்ற போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

இதற்கு முன்பு பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா அவரது முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார். ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற தொடரில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31மீ ஈட்டி எறிந்து தங்கம் பதக்கத்தை வென்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார். இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், "இன்றைக்கு 90 மீட்டருக்கு மேல் வீசிவிடுவேன் என நினைத்தேன். அது நடக்கவில்லை. பரவாயில்லை, மெதுவான முன்னேற்றமும் நல்லது தான். இந்த வருடத்தில் இன்னும் பல தொடர்களில் பங்கேற்க இருக்கிறேன், அவற்றிலும் சிறப்பாக வீச வேண்டும்" என்று கூறியுள்ளார்.