Published:Updated:

T20 WC: இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை என்றாலும்,மெல்பர்ன் மைதானத்தில் ஒலிக்கும் இந்தியக் குரல்!

ஜானகி ஈஸ்வர்

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது பெண் மெல்பர்ன் மைதானத்தில் பாடவுள்ளார்.

T20 WC: இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை என்றாலும்,மெல்பர்ன் மைதானத்தில் ஒலிக்கும் இந்தியக் குரல்!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை என்றாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது பெண் மெல்பர்ன் மைதானத்தில் பாடவுள்ளார்.

Published:Updated:
ஜானகி ஈஸ்வர்
கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது  T20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இன்று உலகக்கோப்பை T20 போட்டியின் நிறைவு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதான ஜானகி ஈஸ்வர் என்ற பெண் பிரபல ஆஸ்திரேலிய ராக் இசைக்குழுவான ஐஸ்ஹவுஸுடன் இணைந்து பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டு  'தி வாய்ஸ்' என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் ஜானகி ஈஸ்வர். ஜானகி ஈஸ்வரின் பெற்றோரான அனூப் திவாகரன், திவ்யா ரவீந்திரன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற  மொழிகளில் பாடியுள்ளார்.  

ஜானகி ஈஸ்வர்
ஜானகி ஈஸ்வர்

இன்று மாலை நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பைப் போட்டியின் நிகழ்ச்சியில் பாடவுள்ள ஜானகி ஈஸ்வர் இதுகுறித்து பேசுகையில், ``ஒரு பெரிய கூட்டத்தின் முன் நிகழ்ச்சி நடத்துவதும், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு அது  ஒளிபரப்பப்படுவதும் நம்பமுடியாத அனுபவமாக இருக்கும். என்னுடைய பெற்றோர் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். அவர்கள் மூலமாகத்தான் இந்த வாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொண்டேன். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறியிருக்கிறார்.  T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை என்றாலும் இந்தியக் குரல் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை அதிர வைக்கும் என்று பலரும் சமூக வலைதளத்தில் கருத்துக்களைத்  தெரிவித்து வருகின்றனர்.