Published:Updated:

600 குதிரைகள்; 30 ஜாக்கிகள்... ஊட்டியில் தொடங்கிய 135-வது குதிரைப் பந்தயம்!

சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், பூனே உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டியில் 'டார்க் சன்' என்ற குதிரை வெற்றி பெற்றது.

600 குதிரைகள்; 30 ஜாக்கிகள்... ஊட்டியில் தொடங்கிய 135-வது குதிரைப் பந்தயம்!

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், பூனே உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டியில் 'டார்க் சன்' என்ற குதிரை வெற்றி பெற்றது.

Published:Updated:
சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் தற்போதே சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. மே மாதம் நடைபெற இருக்கும் கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. கோடைக்காலங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஊட்டி ரேஸ் கோர்ஸில் நடத்தப்பட்ட குதிரைப் பந்தயம் தற்போது வரை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக நடத்தப்படவில்லை.

சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்
சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்

இந்த நிலையில்,135-வது குதிரைப் பந்தயம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் இந்தப் பந்தயத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. 5 கோடி ரூபாய் வரை பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. பந்தயத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 பந்தயக் குதிரைகளை அழைத்து வந்துள்ளனர். அதேபோல் 30 ஜாக்கிகளும், 30 பயிற்சியாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து குதிரைப் பந்தய ஏற்பாட்டாளர்கள், "மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டி ரேஸ் கோர்ஸில் நடத்தப்படும் 135-வது குதிரைப் பந்தயம் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி, ஜூன் மாதம் 18-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்
சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள்

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், பூனே உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டியில் 'டார்க் சன்' என்ற குதிரை வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism