Published:Updated:

“இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே பையனைத் திருமணம் செய்து கொள்வேன்!”- பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி

சேஹர் ஷின்வாரி

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகப் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

“இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே பையனைத் திருமணம் செய்து கொள்வேன்!”- பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகப் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சேஹர் ஷின்வாரி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 புள்ளிகளில் இருக்கும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற நாளை வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டும் போதாது. இந்தியாவிற்கும் ஜிம்பாப்வேவிற்கும் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா தோற்றால் மட்டுமே பாகிஸ்தானின் கனவு நினைவாகும். காரணம், அப்போதுதான் இந்திய அணி, 6 புள்ளிகளிலேயே இருக்கும். பாகிஸ்தானும் 6 புள்ளியிலிருந்தாலும் அவர்களின் நெட் ரன்ரேட் அதிகம் என்பதால் அவர்களே அரையிறுதிக்குத் தகுதிபெறுவார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி ட்வீட்  ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஜிம்பாப்வே அணி இந்தியாவைத் தோற்கடித்தால், ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று சேஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சேஹர் ஷின்வாரி
சேஹர் ஷின்வாரி

மற்றொரு பதிவில் “இந்தியாவிற்கும் - ஜிம்பாப்வேயிற்கும் இடையே நடைபெறும் போட்டியில் இந்தியா தோற்றுவிடும். சிகந்தர் ராசா நன்றாக விளையாடி பாகிஸ்தானை அரையிறுதிக்குத் தகுதி பெறச் செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரியின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு எதிராக இவர் இப்படி ட்வீட் செய்வது இது முதல் முறையல்ல. இதற்குமுன் கடந்த வாரம் வங்கதேசத்திற்கும் - இந்தியாவிற்கும் இடையே நடைபெற்ற போட்டியின்போது  "இந்தியா தோற்க வேண்டும், இந்தியா தோற்க வேண்டும்" என்று தொடர்ந்து ட்வீட் செய்திருக்கிறார் சேஹர் ஷின்வாரி. இதனால் சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள், வங்கதேசத்தை இந்தியா தோற்கடித்தால் உங்கள் ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என்று சேஹர் ஷின்வாரிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.