Published:Updated:

Chess Olympiad : `இந்தியா செய்தது சரியல்ல!' - தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான்; காரணம் இதுதான்!

Chess Olympiad

இந்த 10 பேர் கொண்ட குழு சென்னையில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வந்தனர். இந்நிலையில் திடீரென செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது.

Chess Olympiad : `இந்தியா செய்தது சரியல்ல!' - தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான்; காரணம் இதுதான்!

இந்த 10 பேர் கொண்ட குழு சென்னையில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வந்தனர். இந்நிலையில் திடீரென செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது.

Published:Updated:
Chess Olympiad
சென்னையில் நேற்று கோலாகலாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பாகிஸ்தான் அனுப்பிய பத்து செஸ் வீரர்களில், ஐந்து பேர் கொண்ட பெண்கள் அணியில் மெஹெக் குல் மற்றும் அலீனா ஜாஹித், சனோபியா வாசிஃப், நூர் பாத்திமா மற்றும் சஹ்ரிஷ் ஆகியோர் இருந்தனர். ஆண்கள் அணியில் அமீர் கரீம், ஜுனைத் சோஹைல், முஹம்மது வக்கார், முஹம்மது ஷாசெப் மற்றும் எஹ்ட்ஷாம் இருந்தனர். இந்த 10 பேர் கொண்ட குழு சென்னையில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வந்தனர். இந்நிலையில் திடீரென செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானைச் சேந்த 10 செஸ் வீரர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்குக் காரணமாகக் கடந்த 21-ம் ஜம்மு காஷ்மீர் தலைநகரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், ஸ்ரீநகர் பகுதி வழியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஓட்டத்தை இந்தியா நடத்தி வருவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. `சர்வதேச அங்கீகாரம் மிக்க இந்த விளையாட்டுடன் அரசியலைக் கலக்கும் இந்தியாவின் செயலை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கத்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஓட்டத்தை இந்தியா நடத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விஷயத்தைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்து, சர்வதேச சமூகம் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கேலிக்கூத்தை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயல்களால், 7 தசாப்தங்களாக தொடர்ந்து வரும் IIOJK ( Indian Illegally Occupied Jammu and Kashmir) மீதான நியாயமற்ற, சட்டவிரோத மற்றும் கொடுங்கோன்மையைப் பாகிஸ்தான் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தைச் சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் கேள்வி எழுப்புவோம்' என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த செயல் குறித்து இந்தியா, `மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை இஸ்லாமாபாத் அரசியலாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று விமர்சித்துள்ளது.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கச் சென்னை வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 செஸ் வீரர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.