Published:Updated:

Expectations hurts; இந்திய அணியில் இடம் கிடைக்காததால் வருத்தத்துடன் பதிவிட்ட ராகுல் திவாட்டியா?!

ராகுல் திவாட்டியா

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா அயர்லாந்து தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் இதுபற்றி வருத்தத்துடன் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் அயர்லாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இப்தொடருக்கான இந்திய அணியை நேற்றைய தினம் அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கும் இந்திய அணியின் மொத்த விவரம்:

புவனேஷ் குமார் (VC), இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். ஐ.பி.எல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ராகுல் திரிபாதி தேசிய அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் அதே தொடரில் சிறப்பான பல ஃபினிஷ்களை சிறப்பாகச் செய்த ராகுல் திவாட்டியா அணியில் இடம் பெறவில்லை. இதனால் மனமுடைந்து போன ராகுல் திவாட்டியா தன் டிவிட்டர் பக்கத்தில் "எதிர்பார்ப்புகள் வலியை தான் கொடுக்கும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் சிறப்பான பல சம்பவங்களை செய்த திவாட்டியா பெரிதாக பௌலிங் செய்யவில்லை. அதுவே அவருக்கு பாதகமாக அமைந்துள்ளது என்ற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறியும் ஆதரவாகவும் கமென்ட் செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism