Published:Updated:

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை விவகாரம்: முடிவு தெரிவித்த பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி!

ரோஜர் பின்னி, ஜெய்ஷா

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை விவகாரம் குறித்து வெளிப்டையாகப் பேசியிருக்கிறார் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை விவகாரம்: முடிவு தெரிவித்த பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி!

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை விவகாரம் குறித்து வெளிப்டையாகப் பேசியிருக்கிறார் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி

Published:Updated:
ரோஜர் பின்னி, ஜெய்ஷா

2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் பயணம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், இந்திய அரசு அனுமதி வழங்கினால்தான் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இது குறித்துக் கூறிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,"ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா பங்கேற்கும். நாங்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.

Asia Cup 2023: ஜெய்ஷா
Asia Cup 2023: ஜெய்ஷா

இதையடுத்து ஜெய்ஷாவின் இந்த அறிவிப்புக்குப் பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "ஆசியக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்’’ என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. இதனால் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. இதற்கிடையே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "இந்தியா யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. அதில் பங்கேற்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அன்புடன் அழைக்கிறோம். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி இங்குதான் நடைபெறும். அது ஒரு பிரமாண்டமான வரலாற்று நிகழ்வாக அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.

ரோஜர் பின்னி
ரோஜர் பின்னி

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னி, "இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. இந்திய அணி வேறு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அல்லது வேறு நாட்டின் அணிகள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்தியா வந்தாலும் அதற்கு நாங்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இது தொடர்பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். எனவே அந்த முடிவை நாங்கள் மட்டுமே எடுக்க முடியாது" என்று வெளிப்டையாகப் பேசியுள்ளார்.