Published:Updated:

T20 World Cup: ``தினேஷ் கார்த்திக்; பண்ட்; நாளைய போட்டியில் விளையாடப் போவது யார்?" - ரோஹித் சர்மா

தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்

நாளை நடைபெறவுள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் இதுபற்றிப் பேசியிருக்கிறார் ரோஹித் சர்மா.

T20 World Cup: ``தினேஷ் கார்த்திக்; பண்ட்; நாளைய போட்டியில் விளையாடப் போவது யார்?" - ரோஹித் சர்மா

நாளை நடைபெறவுள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் இதுபற்றிப் பேசியிருக்கிறார் ரோஹித் சர்மா.

Published:Updated:
தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி (நாளை) நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மா தமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் நான்கு போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கைக் களமிறக்கியிருந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. எனவே கடைசியாக நடந்த ஜிம்பாப்வேயிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டிருந்தனர். ஆனால், ரிஷப் பண்ட்டும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இருவரில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ரோஹித், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்
ரோஹித், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்

இதுபற்றி பேசியுள்ள ரோஹித் சர்மா, "பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் இந்தத் தொடரில் விளையாடாமல் இருந்தவர் பண்ட். அந்த அடிப்படையில் அவரைக் கடைசியில் நடைபெற்ற போட்டியில் களமிறக்கினோம். மேலும், பெர்த்தில் நாங்கள் விளையாடிய இரண்டு ஆட்டங்களைத் தவிர இந்த சுற்றுப்பயணத்தில் விளையாட முடியாத ஒரே நபர் ரிஷப் பண்ட் மட்டுமே. அவர் தன் திறமையை வெளிப்படுத்த கால அவகாசம் கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். அதே போல், அரையிறுதியில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா அல்லது இறுதிப் போட்டியில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா என்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா ஆட்டங்களுக்கும் தாயாராக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். அதேசமயம் நாளை நடவிருக்கும் போட்டி பற்றி இப்போது கூறமுடியாது. இரண்டு கீப்பர்களும் எங்களுடைய திட்டங்களில் இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.