Published:Updated:

T20 WC: ``பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன்"- ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

T20 WC: ``பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன்"- ரோஹித் ஷர்மா

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரோஹித் ஷர்மா
டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.

இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது, ``கடைசி நேர முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரிவிக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் போட்டிக்கு முன்கூட்டியே தயாராக முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடப்போகும் பதினொரு வீரர்களின் பட்டியல் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. அதில் உள்ள வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிட யோசனைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

 இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

வீரர்கள் சிறந்த முறையில் தயாராக வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அச்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் பார்க்கிறோம். கடைசி நிமிட ஏற்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை . கடைசி நிமிடத்தில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று ஒருவரிடம் சொல்வதை நான் நம்ப விரும்பவில்லை. சூர்யகுமார் யாதவ் துருப்புச்சீட்டாக இருப்பார். அவர் தனது நல்ல பேட்டிங் பார்மைத் தொடர்வார் என நம்புகிறோம்" என்று ரோஹித் ஷர்மா தெரிவித்திருக்கிறார்.