Published:Updated:

Ind vs SL: அர்ஷ்தீப்பிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ரோஹித் சர்மா; நெட்டிசன்கள் பதிலடி!

Ind vs SL | ரோஹித், அர்ஷ்தீப்

அர்ஷ்தீப், புவியிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் ரோஹித் சர்மா; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.

Ind vs SL: அர்ஷ்தீப்பிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ரோஹித் சர்மா; நெட்டிசன்கள் பதிலடி!

அர்ஷ்தீப், புவியிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் ரோஹித் சர்மா; வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.

Published:Updated:
Ind vs SL | ரோஹித், அர்ஷ்தீப்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதில், பாகிஸ்தானுக்கு எதிரான 18-வது ஓவரில் அர்ஷ்தீப் தன் கைக்கு வந்த கேட்ச்சைத் தவறவிட்டார். இதனால் சிலர், அர்ஷ்தீப் சிங்கை `காலிஸ்தானி' என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர். இதோடு நிறுத்திக்கொள்ளாமல், விக்கிப்பீடியாவில் அர்ஷ்தீப் சிங்கின் நாடு இந்தியா என்பதை அகற்றி காலிஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இதையடுத்து நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கும் இலங்கைக்குமான ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி ஆசியக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இதில் ரோஹித் சர்மா அர்ஷ்தீப் சிங்கிடமும் அலட்சியமாக நடந்து கொள்ளும் வீடியோ கிளிப்களும் வைரலானது.

இந்நிலையில் இதைக் கண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரோஹித் சர்மாவின் இந்த செயல்கள் மிகவும் தவறானது என்று பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆசியக் கோப்பை சூப்பர் 4 தொடரில் இந்தியாவிற்கு ஏற்பட்டு வரும் தொடர் தோல்வியால் தோனியின் கேப்டன்சியை நினைவு கூர்ந்து வரும் நெட்டிசன்கள், தோனி தனது சக வீரர்களை கூளாக கையாளும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.