Published:Updated:

டி20 உலகக்கோப்பை: `சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறாரா?'; போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை: `சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறாரா?'; போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது.

Published:Updated:
சஞ்சு சாம்சன்

அடுத்த மாதம் அக்டோபர் 16-ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் ரோஹித் ஷர்மா (C), கே.எல் ராகுல் (VC), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹல், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னாய், தீபக் சஹார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இதில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்று காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். எனவே அவரது ரசிகர்கள் `ஏன் சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பைத் தொடரில் தேர்வுசெய்யப்படவில்லை, அவர் புறக்கணிக்கப்படுகிறாரா?' என்று கேள்வி எழுப்பி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் அவரது சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிசிசிஐ எதிர்த்து போராடவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது இது தொடர்பான பதிவுகள் சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.