Published:Updated:

சோயப் மாலிக்கை விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்ஸா? வைரல் செய்தியின் பின்னணி என்ன?

சானியா - சோயப்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தனது கணவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

சோயப் மாலிக்கை விவாகரத்து செய்கிறாரா சானியா மிர்ஸா? வைரல் செய்தியின் பின்னணி என்ன?

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தனது கணவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

Published:Updated:
சானியா - சோயப்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் இத்திருமணம் கோலாகலமாக நடந்தது. இத்திருமணத்திற்குப் பிறகு இந்தியாவின் மகளாகவும் பாகிஸ்தான் மருமகளாகவும் சானியா மிர்ஸா இருந்து வந்தார். இருவரும் தம்பதிகளாகத் துபாயில் வாழ்ந்து வந்தனர். இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

மகனுடன் சானியா - சோயப்
மகனுடன் சானியா - சோயப்

சமீபத்தில் இருவரும் சேர்ந்து தங்களது மகனின் பிறந்த நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை சோயப் மாலிக் வெளியிட்டு இருந்தார். ஆனால் சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சானியா மிர்ஸாவின் கடந்த சில நாள்களுக்கு முந்தைய இன்ஸ்டாகிராம்/ட்விட்டர் பதிவுகள் இருந்தன. அதில் கடினமான நாள்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சோயப் மாலிக், சானியா மிர்ஸாவிற்குத் துரோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சோயப் மாலிக் டிவி நிகழ்ச்சி நடத்தும் போது அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்ஸாவிற்கு துரோகம் செய்ததாக பாகிஸ்தான் மீடியாக்கள் தெரிவித்துள்ளன. இருவரும் சமீப காலமாகத் தனித்து வாழ்வதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன. இது குறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சானியா மிர்ஸாவின் சில பதிவுகள் இருவருக்கும் இடையே பிரிவு இருப்பதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளன.

சானியா - சோயப்
சானியா - சோயப்
ARIF ALI

'உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன. அல்லாவைக் காண' என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் இடையே விரைவில் விவாகரத்து ஏற்படும் என்று தெரிகிறது. இது குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சானியா மிர்ஸா பாகிஸ்தானில் டென்னிஸ் அகாடமி தொடங்குவதாக இருந்தது. இது குறித்து சோயப் மாலிக்கிடம் கேட்டதற்கு அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார். இப்போது இருவரும் தங்களது மகனுக்கு இணை பெற்றோராக மட்டுமே இருந்து வருகின்றனர்.