Published:Updated:

Throwback போட்டோ; ட்ரோல் செய்த நெட்டிசன்; கோபமாகத் திட்டிய பும்ராவின் மனைவி!

பும்ரா,சஞ்சனா கணேசன்.

ட்ரோல் செய்த நபருக்குக் கோபமாக பதிலளித்துள்ளார் சஞ்சனா கணேசன்.

Throwback போட்டோ; ட்ரோல் செய்த நெட்டிசன்; கோபமாகத் திட்டிய பும்ராவின் மனைவி!

ட்ரோல் செய்த நபருக்குக் கோபமாக பதிலளித்துள்ளார் சஞ்சனா கணேசன்.

Published:Updated:
பும்ரா,சஞ்சனா கணேசன்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 31 வயதுடைய சஞ்சனா கணேசன் சேனலின் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக சில ரியாலிட்டி ஷோக்களை அவர் தொகுத்து வழங்கியும் உள்ளார்.

கமெண்ட்
கமெண்ட்

பும்ராவின் மனைவியும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் நேற்று (5.09.2022) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு கீழே #throwback போட்டோ என்றும் பதிவிட்டிருந்தார். அப்பதிவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்றப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படாமல், நீங்கள் இருவரும் விடுமுறைக்கு சென்றிருக்கிறீர்கள் ட்ரோல் செய்துள்ளார். இதற்கு சஞ்சனா கணேசன், “இது ஒரு த்ரோபேக் போட்டோ என்பதை நீங்கள் பார்க்கவில்லையா என்றும், முட்டாள் என்றும் கோபமாகப் பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சஞ்சனா குறிப்பிட்டிருப்பது , சமூக வலைத்தளத்தில் ஒருவர் ட்ரோல் செய்யப்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்பது என்பது முக்கியம் என்று நான் நினைக்கிறன். சமூக வலைதளத்தில் ஒருவரின் மதம், தேசியம், இனம் மற்றும் அடையாளத்தைப் பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு பேசுவது தவறு என்றும், இணையதளத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற முயற்சிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.