Published:Updated:

T20 World Cup : "Sorry brother, இதுதான் Karma"- ஷோயப் அக்தருக்கு பதிலளித்த முகமது ஷமி!

ஷோயப் அக்தர், முகமது ஷமி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் ஷோயப் அக்தரின் ட்வீட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

T20 World Cup : "Sorry brother, இதுதான் Karma"- ஷோயப் அக்தருக்கு பதிலளித்த முகமது ஷமி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் ஷோயப் அக்தரின் ட்வீட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஷோயப் அக்தர், முகமது ஷமி
கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது  T20 உலகக்கோப்பை போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

கடந்த 10ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணியை, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவோ அல்லது விமானத்தில் மெல்போர்ன் வரவோ இந்திய அணிக்கு தகுதியில்லை. என்றும், பின் முகமது ஷமி ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் தான். ஆனால் அவருக்கு டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இருப்பதற்குத் தகுதியில்லை” என்றும் ஷோயப் அக்தர் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட்  வீரர் ஷோயப் அக்தர், heart broken emoji-ஐ குறிப்பிட்டு பாகிஸ்தான் அணி தோல்வடைந்ததை வருத்தத்துடன்  சுட்டிக்காட்டி இருந்தார்.

இதனிடையே  அந்த ட்வீட்டுக்கு  இந்திய வீரர் முகமது ஷமி பதில் ட்வீட் செய்துள்ளார். அதில், “சாரி பிரதர் (sorry brother) இதுதான் கர்மா" என ஷோயப் அக்தரின்  ட்வீடுக்கு பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.