Published:Updated:

"அப்பா! இன்னும் உங்களை இறுக்கக் கட்டிக்கொள்ள விரும்புகிறேன்..."- ஷேன் வார்னே மகளின் அஞ்சலிக் கடிதம்!

ஷேன் வார்னே குழந்தைகளுடன் ( abc )

"எங்களது துயரை விவரிக்கும் வார்த்தையைக் கண்டறிவது என்பது இயலாத செயல். ஷேன் இல்லாத எதிர்காலம் நினைத்துக்கூட பார்க்க முடியாதது"

"அப்பா! இன்னும் உங்களை இறுக்கக் கட்டிக்கொள்ள விரும்புகிறேன்..."- ஷேன் வார்னே மகளின் அஞ்சலிக் கடிதம்!

"எங்களது துயரை விவரிக்கும் வார்த்தையைக் கண்டறிவது என்பது இயலாத செயல். ஷேன் இல்லாத எதிர்காலம் நினைத்துக்கூட பார்க்க முடியாதது"

Published:Updated:
ஷேன் வார்னே குழந்தைகளுடன் ( abc )

'ஷேன் வார்னே மரணம் இயற்கையானது தான்' என அவரது பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு தாய்லாந்து போலீஸ் அறிவித்திருக்கிறது. 52 வயதான ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் தங்கியிருந்த அறையில் உயிரிழந்தார். அவரது உடலில் சந்தேகம்படும்படியான காயங்களோ, அறிகுறிகளோ இல்லையென்றும் கோவிட்-19 தொற்று கிடையாது எனவும் உறுதி செய்திருக்கிறது தாய்லாந்து போலீஸ். நாளை அவரது உடல் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்ட உள்ளது.

ஷேன் வார்னே பிரிந்தத துயரை அவரது குடும்பத்தார் அறிக்கை வாயிலாக பகிர்ந்துள்ளனர். அந்த அறிக்கையில் அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள், முன்னாள் மனைவி ஆகியோரின் விரிவான இரங்கல் செய்திகள் பதிவாகியுள்ளன.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

"2022 மார்ச் 4 அன்றைய நாளின் இரவு ஒருபோதும் முடிந்திடாத கொடுங்கனவின் தொடக்கமாக எங்களுக்கு அமைந்தது. அந்த நாளில் எங்களுக்கு மகனாக, அப்பாவாக, சகோதரனாக இருந்தவரை இழந்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் அது." ஷேனின் பெற்றோர்களான தந்தை கீத் (Keith), தாய் ப்ரெகேட் (Brigette) இருவரின் வார்த்தைகள் இவை.

"எங்களது துயரை விவரிக்கும் வார்த்தையைக் கண்டறிவது என்பது இயலாத செயல். ஷேன் இல்லாத எதிர்காலம் நினைத்துக்கூட பார்க்க முடியாதது, நாங்கள் கொண்டிருக்கிற மலையளவு மகிழ்ச்சியான நினைவுகள் இந்தத் துயரில் இருந்து எங்களை மீட்க உதவி செய்யும் என நம்புகிறோம்"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

24 வயதான வார்னேவின் மூத்த மகள் ப்ரூக் (Brooke) அப்பாவுடனான சந்தோஷமான தருணங்களை நினைவுகூர்கிறார்.

"நாங்கள் பல விஷயங்களில் ஒன்றுபோல இருப்போம். உங்கள் ஜீன் என்னிடம் இருப்பது எரிச்சலாக இருக்கிறது என நான் எப்போதும் அதை வைத்து ஜோக் அடித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் இப்போது எனக்கு பெருமையோ, மகிழ்ச்சியோ இல்லை. நான் அதிர்ஷ்டசாலி, எப்போதைக்கும் நான் அப்பா என அழைப்பதற்கு பெருமைப்படுகிறேன். அளவற்ற அன்பு உங்கள்மீது எப்போதைக்கும் இருக்கிறது. உங்களை மிஸ் செய்வேன்"

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

வார்னேவின் மகன் ஜாக்ஸன், "போக்கர் டேபிளில் அமர்ந்து விளையாடுவது, கோல்ப் மைதானத்தில் நடப்பது, துறவிகளை வேடிக்கை பார்ப்பது, பீட்சா சாப்பிடுவது எதுவும் இனி பழைய மாதிரி இருக்கப்போவதில்லை. என்ன நடந்தாலும் நீங்கள் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என விருப்பப்பட்டீர்கள். அதனாலேயே நான் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பேன். "

"நீங்கள் இறக்கவில்லை. வேறு இடத்திற்கு சென்றுவிட்டீர்கள். அந்த இடம் எங்கள் இதயம் தான்" வார்னேவின் இளைய மகள் சம்மர் பகிர்கிறார், "நான் உங்களைக் கடைசியாக சந்தித்தது தான் கடைசியாக இருக்கும் எனத் தெரியவில்லை. இன்னும் உங்களை இறுக்க கட்டிக்கொள்ள விரும்புகிறேன்." என ஷேன் வார்னேவைப் பிரிந்த துயரைப் பகிர்ந்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர். இந்த உருக்கமான கடிதம் எல்லாரையும் உறைய வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism