Published:Updated:

Asia Cup 2022: மைதானத்தில் சண்டை; ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஷோயப் அக்தர் சொன்ன அறிவுரை!

ஷோயப் அக்தர்

நேற்று நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் -பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் மைதானத்தில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்; ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு சொயிப் அக்தர் அறிவுரை.

Asia Cup 2022: மைதானத்தில் சண்டை; ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஷோயப் அக்தர் சொன்ன அறிவுரை!

நேற்று நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் -பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் மைதானத்தில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்; ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு சொயிப் அக்தர் அறிவுரை.

Published:Updated:
ஷோயப் அக்தர்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் பௌலர்களின் அசத்தல் பௌலிங்கால் இந்த எளிய இலக்கை மிக கடினப்பட்டே எட்டிப்பிடித்தது பாகிஸ்தான் அணி. ஒரு கட்டத்தில் போட்டியை ஆப்கானிஸ்தானே வெற்றி பெரும் என்றிருந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளை நசீம் ஷா சிக்சருக்கு விளாச 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது அந்த அணி. இதையடுத்து வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களும், தோல்வியின் வருத்தத்தில் இருந்த ஆஃப்கானிஸ்தான் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளையும், பொருட்களையும் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

அதுமட்டுமில்லாமல், போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளரை பேட்டை காட்டி அடிக்கும் வண்ணம் சைகை காட்டிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் "இதைத் தான் ஆப்கன் ரசிகர்கள் எப்போதும் செய்து வருகின்றனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். இது ஒரு விளையாட்டு மட்டுமே. ரசிகர்களும் விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்கவேண்டும். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் வளர முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதைக் கண்ட நெட்டிசன்கள், 'விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் இப்படி அடித்துக் கொள்வது வருத்தத்திற்குரியது' என்றும் 'சம்பத்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் பதிவிட்டு வருகின்றனர்.