Published:Updated:

Kohli: "ஆஸ்திரேலியாவில் எங்கள் கனவை அடைய முடியாமல் இதயங்களில் ஏமாற்றத்துடன் செல்கிறோம்"- விராட் கோலி

விராட் கோலி

டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார்.

Kohli: "ஆஸ்திரேலியாவில் எங்கள் கனவை அடைய முடியாமல் இதயங்களில் ஏமாற்றத்துடன் செல்கிறோம்"- விராட் கோலி

டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார்.

Published:Updated:
விராட் கோலி

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நேற்று (10.11.2022) நடைப்பெற்ற  இந்தியா- இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்தியா  10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி 168 ரன்களை எடுத்திருந்தது. 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இருந்த இங்கிலாந்து அணி 170 ரன்கள் அடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் தோல்வி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தோல்விக்குப் பிறகு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "ஆஸ்திரேலியாவில் எங்கள் கனவை அடைய முடியாமல், இதயங்களில் ஏமாற்றத்துடன் செல்கிறோம். ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். இந்த ஜெர்சியை அணிந்து எங்கள் நாட்டை  பிரதிநிதித்துவப்படுத்துவதில் எப்போதும் பெருமைப்படுகிறேன். மைதானங்களில் எங்களை ஆதரித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி "என்று பதிவிட்டுள்ளார்.