Published:Updated:

“நாம் எல்லோரும் ஒரு குடும்பம்!” - செஸ் ஒலிம்பியாட் ஸ்பெஷல்

பிரக்ஞானந்தா -  ரண்டா செடர்
பிரீமியம் ஸ்டோரி
பிரக்ஞானந்தா - ரண்டா செடர்

சகலகலா வல்லவனாகச் சுற்றிச் சுழன்ற இன்னொரு நபர் டென்மார்க்கின் கேப்டனான சூன் பெர்க் ஹேன்சன்

“நாம் எல்லோரும் ஒரு குடும்பம்!” - செஸ் ஒலிம்பியாட் ஸ்பெஷல்

சகலகலா வல்லவனாகச் சுற்றிச் சுழன்ற இன்னொரு நபர் டென்மார்க்கின் கேப்டனான சூன் பெர்க் ஹேன்சன்

Published:Updated:
பிரக்ஞானந்தா -  ரண்டா செடர்
பிரீமியம் ஸ்டோரி
பிரக்ஞானந்தா - ரண்டா செடர்

44வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடந்துவருகிறது. இரண்டு மாத காலத்தில் இதற்கான அனுமதியைப் பெற்று, 4 பாயின்ட் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் இவ்வளவு பிரமாண்டமாய் இந்தப் போட்டிக்குப் பல விஷயங்களைச் செய்ததில் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் பங்கு அளப்பரியது. ஏழு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய அணிகள் நம்பிக்கை தந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதன் காரணம் அதில் தெரிந்தது. போட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த சில சுவாரஸ்யத் துளிகள் இதோ.

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா
குகேஷ்
குகேஷ்
நந்திதா
நந்திதா

* இந்தியாவுக்கு இந்த முறை நிறைய அதிர்ஷ்டம் காத்திருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்பதால், இந்தியா ஓப்பன் & பெண்கள் பிரிவில் கூடுதலாக ஒரு அணியைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இன்னும் எட்டு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட முடியும். அதோடு, பங்கேற்கும் ஒட்டுமொத்த அணிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் வந்துவிட்டதால், இன்னும் கூடுதலாக ஒரு அணி என இந்தியா சார்பில் மொத்தம் இந்த முறை ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

* ஹாங்காங்கில் சிகப்பி கண்ணப்பன், கேமேன் தீவுகளில் லயா ஸ்வாமிநாதன் என நம்மூர் பெயர்களிலும் சில அயல்நாட்டு வீரர்களைக் காண முடிந்தது. லயா ஸ்வாமிநாதன் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தானாம். கடந்த ஏழு ஆண்டுகளாக, குடும்பத்துடன் கேமேன் தீவுகளில் வசிக்கிறார். ‘‘சென்னைக்கு வந்ததுல இருந்து, நாங்க எதுக்குமே செலவு பண்ணல. அவ்ளோ நல்லா பார்த்துக்கறாங்க’’ என்றார் லயாவின் தந்தை. லயாவின் தேசத்தின் சார்பாக பெண்கள் அணியை உருவாக்க போதிய நபர்கள் இல்லையாம். அதனால், ஓப்பன் பிரிவில் பங்கேற்கிறார்.

அதிபன்
அதிபன்
ஹரிகா
ஹரிகா
டானியா சச்தேவ்
டானியா சச்தேவ்

* செஸ் போட்டிகளின் தலைமையான FIDE-யின் மோட்டோ Gens Una Sumus. ‘நாம் எல்லோரும் ஒரு குடும்பம்’ என்ற அர்த்தம் தரும் லத்தீன் சொற்களே அவை. அப்படியான நெகிழ்ச்சித் தருணங்களையும் போட்டிகளின் இடையே காண முடிந்தது. எஸ்டோனிய தேசத்து கிராண்ட் மாஸ்டரான கனீப் மீல்ஸுக்கு விளையாடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பத்து நிமிடத்துக்குள், அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். அவருக்கு எதிராக விளையாடிய ஜமைக்கா வீரரான ஜேடன் ஷா, எஸ்டோனிய கேப்டனிடம் டிரா செய்ய விரும்புவதாக அறிவித்தது FIDE மோட்டோவை மீண்டும் உறுதி செய்தது.

* சகலகலா வல்லவனாகச் சுற்றிச் சுழன்ற இன்னொரு நபர் டென்மார்க்கின் கேப்டனான சூன் பெர்க் ஹேன்சன். ஏழு முறை டென்மார்க்கின் சாம்பியனான ஹேன்சன் இதுவரையில் எட்டு ஒலிம்பியாட்களில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை அணியின் கேப்டனாக வந்ததோடு, பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து எழுதி வருவதால், மீடியா , கேப்டன் எனப் பல ஐடி கார்டுகளுடன் வலம் வந்துகொண்டிருந்தார்.

* செஸ் என்பதே சிறு வயதிலிருந்தே பயிற்சி செய்து சாதிக்கும் விளையாட்டு என்பதால் பல குட்டீஸ்களை ஒலிம்பியாடில் காண முடிந்தது. பத்து வயது ஸ்காட்லாந்துச் சிறுவன், 11 வயது பூட்டான் சிறுவன் என ஒலிம்பியாடில் பலர் தங்கள் அணிக்காக விளையாடிக்கொண்டிருக்க, எல்லோரையும் ஈர்த்தது எட்டு வயது பாலஸ்தீனச் சிறுமியான ரண்டா செடர் தான். அவர் உயரத்துக்கு விளையாடவும் சற்று சிரமப்பட்டார். போட்டியைக் காணவந்த முதல்வர் ஸ்டாலின், ரண்டா பற்றி அறிந்து அவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார்.

 ரண்டா செடர்
ரண்டா செடர்
மேக்னஸ் கார்ல்சன்
மேக்னஸ் கார்ல்சன்
“நாம் எல்லோரும் ஒரு குடும்பம்!” - செஸ் ஒலிம்பியாட் ஸ்பெஷல்

* ஹால் 1, ஹால் 2 என இரண்டு ஹால்களில் போட்டிகள் நடக்கின்றன. இதுபோக, செஸ் தொடர்பாகப் பல விஷயங்களை இன்னொரு அரங்கில் நடத்தினார்கள். அதில் பலரின் ஆர்வத்தையும் தூண்டியது Square off நிறுவனத்தின் தானியங்கி AI செஸ் போர்டுதான். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனைவிடவும் அதிக ரேட்டிங் செட் செய்து, இந்த செஸ் போர்டுடன் நீங்கள் ஆடலாம். அதேபோல, ஒவ்வொரு நாளும் நடக்கும் சர்வதேசப் போட்டிகள் இதனுள் லோடு செய்யப்படுகின்றன. ஆகையால் அந்தப் போட்டிகளையும் ஹாயாக அமர்ந்து, தானாக நகரும் காய்களின் வழி பார்த்து செஸ் கற்கலாம்.

* நேரு ஸ்டேடியத்தில் நடந்த வரவேற்பு விழா, முதல் சுற்று என எதிலும் பங்கேற்காமல், நேரடியாக இரண்டாம் சுற்றிலிருந்து ஆட வந்தார் மேக்னஸ் கார்ல்சன். கார்ல்சனுடன் ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என வாலண்டியர்கள் முதல் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், தான் ஆடிய முதல் போட்டியில் அவர் சோம்பல் முறிக்க, அது செஸ் உலகின் வைரல் புகைப்படம் ஆனது.

கொனிரு ஹம்பி
கொனிரு ஹம்பி
வந்திகா அக்ரவால்
வந்திகா அக்ரவால்

* திருவிழாவில் சோறு இல்லாமல் எப்படி? விதவிதமான உணவுகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தவர் செஸ்ஸபிள் சி.ஐ.ஓ-வான கீர்ட் வேன் டெர் வெல்ட். ஈ.சி.ஆரின் சைவ உணவகங்களுக்குள் அவரின் குழுவுடன் புகுந்து, கல்யாண சமையல் சாதம் எனப் பாடாத குறையாக உணவு விமர்சனம் செய்துகொண்டிருந்தார்.

* ஒலிம்பியாடின் லக்கி நபராக இருந்தார் இந்தியா மூன்று அணியில் விளையாடிய நந்திதா. இரண்டாவது சுற்றில், அவருக்கு எதிரான நபர் விளையாட வராததால், வின் என அறிவிக்கப்பட்டார்.

* இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் அந்தந்த அரசுகளின் செலவில் போட்டியைக் காண வந்திருந்தார்கள். மேகாலயச் சிறுவன் ஒருவன் எல்லோரிடமும், ‘எங்கூட யாராவது செஸ் விளையாட வர்றீங்களா?' என ஜாலியாக நச்சரித்துக்கொண்டிருந்தான்.

* வித்தியாசமான ஆடைகள், ஹேர்ஸ்டைல் என ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்த முறையும் ஷோ காட்டினார்கள். நம் புகைப்படக் கலைஞர்களிடம் சிக்கிய வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் மட்டும் நூற்றுக்கு மேல் இருக்கும்.

கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்
கலக்கல் ஹேர்ஸ்டைலில் போட்டியாளர்கள்

* வீரர்களுக்கு யோகா, பீச் வாக் எனப் பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. லீலா பேலஸில் பயிற்சியில் ஆரம்பித்து, ஈ.சி.ஆர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்து கவனித்தது வரை, எல்லா வீரர்களும், அரசுக்கு நன்றி சொல்ல மட்டும் மறக்கவில்லை.

* ‘இங்கு யாருமே தோற்பவர்கள் அல்ல, எல்லோருமே வெற்றியாளர்கள்தான்’ என முதல்நாள் உரையில் பேசினார் மோடி. இந்தியாவில் செஸ் வீரர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மத்தியில் வேறு சில சர்வதேசப் போட்டிகளும் நடைபெற்றுவருகின்றன. கான்ஸ் சம்மர் 2022 போட்டியில், பிரனேஷ் என்னும் 16 வயது இந்திய இளைஞர் கோப்பை வென்றிருக்கிறார்.