சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஐ.பி.எல் திருவிழா - அணிகளின் ப்ளஸ், மைனஸ், அலசல்

ஐ.பி.எல் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.எல் திருவிழா

சும்மாவே கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் இனி தோனியை சிஎஸ்கே முகாமில் மட்டுமே பார்க்க முடியுமென்றால் சும்மா இருப்பார்களா?

‘நடக்குமா நடக்காதா, நடந்தால் எப்படி நடக்கும், யாரெல்லாம் இருப்பார்கள், யாராவது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட மொத்தத் தொடரும் என்னாகும் என ஆறு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களை குடைந்துகொண்டிருந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை 19-ஆம் தேதி இரவு சுண்டப்படும் டாஸ் காயினில் ஒளிந்திருக்கிறது. தொட்டுவிடும் தூரத்தில் ஐ.பி.எல் தொடங்க இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அணிகளின் ப்ளஸ், மைனஸ் அலசல் இது.
சென்னை 
சூப்பர்கிங்ஸ்
சென்னை சூப்பர்கிங்ஸ்

சென்னை சூப்பர்கிங்ஸ்

தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளுள் ஒன்று. சும்மாவே கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் இனி தோனியை சிஎஸ்கே முகாமில் மட்டுமே பார்க்க முடியுமென்றால் சும்மா இருப்பார்களா? வெறித்தனமாய்க் காத்திருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் தொற்று, ரெய்னா குறித்த செய்திகள் என அணியைச் சுற்றி நெகட்டிவ் அதிர்வுகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருக்கின்றன. வழக்கமாய் வீக்காக இருக்கும் பவுலிங்கில் இந்த முறை ஹெசல்வுட், சாம் கர்ரன் போன்றவர்கள் கொஞ்சம் பலம் சேர்க்கலாம். யு.ஏ.இயிலும் ஸ்லோ பிட்ச்கள் என்பதால் சென்னை ஸ்பின்னர்களுக்கு செம வேட்டை காத்திருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

கண்டிப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும் என நம்பி பந்தயம் வைக்கும் குதிரை இது. முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் அனைவருமே இந்தியர்கள் என்பதால் வெளிநாட்டு வீரர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். அஷ்வினின் விரல் வித்தை பவர்ப்ளேயில் வெகுவாக கைகொடுக்கும். ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த பினிஷர் இல்லாதது சேஸிங்கில் மிகப்பெரிய சறுக்கலைக் கொடுக்கலாம். ஸ்டாய்னிஸ், கேரி போன்றவர்கள் க்ரீஸில் டைம் எடுத்து ஆடுவார்கள் என்பதால் அவர்களால் அதைச் செய்யமுடியுமா என்பதும் சந்தேகமே.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

புத்தம்புது கேப்டனோடு களமிறங்குகிறது பஞ்சாப். கே.எல்.ராகுல் டி20களில் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்துவந்தாலும் ஐ.பி.எல்லில் கேப்டனாக எப்படி பிரஷரைத் தாங்குவார் என்பதுதான் அந்த அணியைத் தற்போது சுற்றிவரும் கேள்வி. ஒருவேளை பூரனுக்குப் பதில் கீப்பிங்கையும் அவரே செய்தால் அது கூடுதல் பிரஷரை உருவாக்கும். கருண் நாயர், சர்ஃபராஸ் கான், மந்தீப் என இந்திய மிடில் ஆர்டர் பர்ஃபார்ம் செய்வதைப் பொறுத்துத்தான் அணியின் வெற்றிவாய்ப்புகள் இருக்கின்றன.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

டி20 ஸ்பெஷலிஸ்ட்டான மெக்கல்லம் அணியின் கோச்சாக பதவியேற்றிருப்பது நிச்சயம் பாசிட்டிவ் விளைவுகளை உண்டாக்கும். மோர்கன் ஆடும்பட்சத்தில் அவரின் அனுபவம் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு கைகொடுக்கும். அணி பெரிதும் நம்புவது பலகோடி கொடுத்து எடுத்த பேட் கம்மின்ஸைத்தான். நரைன், கம்மின்ஸ், ரஸல் ஆகியோர் எல்லாப் போட்டிகளிலும் அணியில் கட்டாயம் இருப்பார்கள் என்பதால் மிச்சமிருக்கும் ஒரு வெளிநாட்டு வீரர் இடத்தை எப்படி நிரப்பப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

தொடரிலேயே நன்றாக செட்டில் ஆகியிருக்கும் ஒரே அணி இதுதான். ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா சகோதரர்கள் என அசைக்கமுடியாத கோர் டீம் தான் அணியை வெற்றிக்கு வழிநடத்துகிறது. டாப் ஆர்டரில் மேலும் பலம் சேர்க்கிறது க்றிஸ் லின், டி காக் இணை. ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் களத்திற்கு வரும் ஹர்திக் ஃபார்மில் இருக்கவேண்டியது அணிக்கு மிகவும் முக்கியம். மலிங்காவை டெத் ஓவர்களில் நிச்சயம் மிஸ் செய்வார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

‘பதிமூணுமே ரம்மி கார்டுனா என்னப்பா பண்றது?’ லெவலில் இருக்கிறது ராஜஸ்தானின் வெளிநாட்டு வீரர்கள் லிஸ்ட். ஸ்மித் கேப்டன், ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர், ஆர்ச்சர் முதன்மை பவுலர் என மூன்று இடங்கள் கிட்டத்தட்ட உறுதியென்பதால் எஞ்சிய ஒரு இடத்தில்தான் மற்றவர்களை யோசிக்கவேண்டும். அதிலும் அனேகமாய் பட்லர்தான் ஆடுவார். உத்தப்பா, சஞ்சு சாம்சன், உனட்கட் என மூன்று இந்திய வீரர்களைத் தவிர்த்து மீதி எல்லாருக்குமே ஐ.பி.எல் அனுபவம் போதுமான அளவிற்கு இல்லாதது கொஞ்சம் பிரச்னைதான்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

ஏறக்குறைய எல்லாருடைய இரண்டாவது பேவரிட் அணியாக சன்ரைஸர்ஸ்தான் இருக்கும். காரணம் வார்னரும் கேன் வில்லியம்சனும். ஆனால், போன தடவை போலவே இம்முறையும் வில்லியம்சனுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. வார்னர், பேர்ஸ்டோ, ரஷித் மூவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். ஆக, அந்த நான்காவது வெளிநாட்டு வீரர் யார் என்பதுதான் பெரிய குழப்பம். மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர் இருவரின் ஃபார்மும் வெற்றிக்கு மிகமுக்கியம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தமுறையும் ‘ஈ சாலா கப் நமதே’ கோஷம்தான். அதற்கு ஓரளவிற்கு நியாயம் செய்யுமளவிற்கு அணியும் இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பின்ச்சின் வருகை அணியின் நீண்டகாலக் கவலையான டாப் ஆர்டர் பிரச்னையைத் தீர்க்கும். ஸ்லோ ட்ராக்குகள் கொண்ட யு.ஏ.இ மைதானங்களில் ஸ்பின் பவுலிங்கில் பலமான அணியாக கெத்து காட்டுகிறது ஆர்.சி.பி. கோலியின் அணித்தேர்வு முந்தைய ஆண்டுகளைப் போல சொதப்பலாக இல்லாவிட்டால் நிச்சயம் ப்ளே ஆஃப் வாய்ப்பிருக்கிறது.