Published:Updated:

T20 WC:`இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனமில்லை' - அடுத்த பந்திலேயே அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்!

சூர்யகுமார் யாதவ்

இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனம் இல்லை என்று சூர்யகுமார் யாதவ் கூறியநிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டத்தை இழந்துள்ளார்.

T20 WC:`இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனமில்லை' - அடுத்த பந்திலேயே அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்!

இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனம் இல்லை என்று சூர்யகுமார் யாதவ் கூறியநிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டத்தை இழந்துள்ளார்.

Published:Updated:
சூர்யகுமார் யாதவ்

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களை எடுக்க கே.எல் ராகுல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இதன்பின் பேட்டிங் செய்த விராட் கோலி 19 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 20 ரன்களையும் எடுத்த நிலையில் களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் அக்சர் படேலிடம் "இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனம் இல்லை” என்று பேசியது பதிவாகியுள்ள நிலையில் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டத்தை இழந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரியகுமார்அரைசதம் அடித்த போதுமே வழக்கமான கொண்டாட்டம் அவரிடம் வெளிப்பட்டிருக்கவில்லை. ஒருவித அதிருப்தியுடனேயே காணப்பட்டார். 33 பந்துகளில் 50 ரன்களை யாதவ் எடுத்துக் கொடுத்ததன் விளைவாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 186 ரன்கள் எடுத்து போட்டியையும் வென்றிருக்கிறது.