Published:Updated:

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

UEFA
பிரீமியம் ஸ்டோரி
UEFA

FIFA உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் ரசிக்கப்படும் தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

FIFA உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் ரசிக்கப்படும் தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.

Published:Updated:
UEFA
பிரீமியம் ஸ்டோரி
UEFA

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏந்தும் ஆயுதங்கள் குத்துவது சாமானியரின் கண்களைத்தானே! உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கதைதான் இது. இப்போது கால்பந்து உலகத்திலும் ‘யூரோப்பியன் சூப்பர் லீக்’ எனும் பெயரில் இப்படியொரு துரோகம் அரங்கேறியது. ஆனால், ரசிகர்கள் நடத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் அதை முளையிலேயே கிள்ளி வீசியிருக்கிறது.

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

FIFA உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் ரசிக்கப்படும் தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக். ஐரோப்பாவின் மிகச் சிறந்த அணிகள் பங்குபெறும் இந்தத் தொடர் ஆண்டுதோறும் நடக்கும். கால்பந்து உலகக் கோப்பைபோல் குரூப் சுற்று, நாக் அவுட் சுற்று எனத்தான் போட்டிகள் நடக்கும்.

இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகளைச் சேர்ந்த பெரிய அணிகள் மட்டுமல்லாமல், செக் குடியரசு, கிரீஸ், உக்ரைன் போன்ற நாடுகளைச் சேர்ந்த சிறிய அணிகளுக்கும் இந்தத் தொடரில் இடம் இருக்கும். இன்னொரு முக்கிய அம்சம், இந்த ஆண்டு தேசிய லீக்கில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே, இந்தத் தொடரில் இடம் கிடைக்கும். ரியல் மாட்ரிட் போன்ற பெரிய அணியாக இருந்தாலும் ஸ்பானிஷ் லீகில் நன்றாக ஆடினால்தான் இடம்.

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

இந்த சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு மாற்றாக ‘யூரோப்பியன் சூப்பர் லீக்’ என்ற தொடரைத் தொடங்கின ஐரோப்பாவின் பிரசித்திபெற்ற அணிகள். அதாவது, மொத்தம் 20 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கும். அதில் 15 அணிகள் நிரந்தர உறுப்பினர்கள். அவர்கள் வெளியேற்றப்படவே மாட்டார்கள். மற்ற 5 இடங்களுக்கு மட்டும் தகுதிச்சுற்றுகள். தொடருக்கான பொருளாதாரத் தேவைக்கு, அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் வங்கி பின்புலமாக இருக்கிறது. நாக் அவுட் போட்டிகள் இல்லாமல் லீக் முறைப்படி ஆடப்படும் இந்தத் தொடரின் உறுப்பினர் அணிகளுக்கு முதல் சீசன் முடியும்போதே சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

இந்தத் தொகைதான் ஒவ்வொரு அணியையும் கால்பந்தை மறந்து, ரசிகர்களை மறந்து அந்த லீகில் சேரச் செய்தது. இதனால், என்ன விளைவு ஏற்படும், கால்பந்து என்னவாகும் என்று எந்த அணியும் யோசிக்கவில்லை. தங்கள் ரசிகர்களிடம்… ஏன், வீரர்கள், பயிற்சியாளர்களிடம்கூட ஆலோசிக்காமல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த லீக் நடந்தால், பெரிய அணிகள் காட்டில் பண மழை கொட்டும். அவர்கள் எந்த வீரரையும் தங்கள் வசம் இழுக்க முடியும். நட்சத்திர வீரர்களை மொத்தமாக அணியில் இணைக்க முடியும்.

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

“இந்த யூரோப்பியன் சூப்பர் லீக், கால்பந்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். கால்பந்து ஒரு பிரமிடு. மேலே இருக்கும் அணிக்குக் காசு வந்தால்தான், கீழே இருக்கும் அணிகளுக்குக் காசு வரும். அந்த அணிகள் பொருளாதாரரீதியாக முன்னேறவுமே இந்தத் தொடர் அவசியம்” என்று பாசிசத்தின் உச்சத்தில் நின்றார் சூப்பர் லீக் தலைவர் ஃப்ளோரன்டினோ பெரஸ். அதுமட்டுமல்லாமல், “இளைஞர்கள் இப்போதெல்லாம் முழுப் போட்டியையும் பார்ப்பதில்லை. அதனால் 90 நிமிடத்திலிருந்து ஆட்டத்தின் நேரத்தைக் குறைக்கவேண்டும்” என்று கால்பந்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அத்தனை திட்டங்களையும் ஏதோ புரட்சி செய்வதுபோல் சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த லீக் பற்றிய அறிவிப்பு வந்ததுமே தேசியக் கால்பந்து சங்கங்கள், ஐரோப்பியக் கால்பந்து சங்கம், ஃபிஃபா என பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐரோப்பியக் கால்பந்து சங்கம், அந்த அணிகள்மீதும், அந்த அணிகளின் வீரர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. அந்த அணியின் வீரர்கள் உலகக் கோப்பையில் ஆடமுடியாத சூழல் ஏற்படும் என்றுகூட மிரட்டல் விடுத்தது. கால்பந்து சங்கங்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனே இதைக் கடுமையாக விமர்சித்தார்.

ஒரு தேசத்தின் பிரதமர் ஏன் கால்பந்தில் நடக்கும் மாற்றத்தில் தலையிடவேண்டும்?! இன்று அமெரிக்க, சீன ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு விஷயத்துக்காக இந்த உலகமே இங்கிலாந்தைத் திரும்பிப் பார்க்கிறதென்றால் அது பிரீமியர் லீக் தொடருக்காகத்தான். அந்தப் பெயர் போய்விட்டால், அங்கு எதுவுமே மிஞ்சாதே!

இந்த சூப்பர் லீக்மீது நடவடிக்கை எடுப்பதாக UEFA மிரட்ட, நடவடிக்கை எடுக்கும் சங்கங்கள்மீது வழக்கு தொடர்வோம் என்று இவர்கள் அறிக்கை விட, ஒரு மாபெரும் பனிப்போர் கால்பந்து உலகில் அரங்கேறத் தொடங்கியது. ஆனால், இரண்டே தினங்களில் எல்லாம் ஓய்ந்துபோனது. காரணம், இதைத் தங்களின் சிவில் வாராகக் கையில் எடுத்தனர் ரசிகர்கள்.

மற்ற அணிகளெல்லாம் சமூக வலைதளங்களில் இந்த அணிகளை ஊமைக்குத்தாகக் குத்தின. லீட்ஸ், பிரைட்டன் போன்ற அணிகள் லிவர்பூல், செல்சீ அணிகளுக்கெதிராக மோதியபோது ‘கால்பந்து ரசிகர்களுக்கானது’ என்ற வாசகம் இடம்பெற்ற டி-ஷர்ட் அணிந்து பயிற்சி செய்தன. பல முன்னாள், இந்நாள் வீரர்கள், மேனேஜர்கள்… இவ்வளவு ஏன், அந்த லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடட் வீரர்களுமேகூட இதற்கு எதிராகப் பேசினார்கள்.

இவற்றையெல்லாம் அந்த அணிகள் எதிர்பார்த்திருந்திருக்கும். ஆனால், ரசிகர்கள் வெகுண்டெழுந்ததை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். இங்கிலாந்தில் இருந்து சூப்பர் லீகில் ஒப்பந்தமான 6 அணிகளின் ரசிகர்களும் தங்கள் மைதானங்களுக்கு முன்பு கூடிப் போராடத் தொடங்கினார்கள். RIP Football என்ற பதாகைகள் எங்கெங்கும் காணப்பட்டன.

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!
இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

தங்கள் அணி பெரிய தொடரில் ஆடினால், நிறைய பணப்புழக்கம் வரும், பெரிய வீரர்களை வாங்கலாம், வெற்றிகள் குவியும். ஆனால், இந்த ரசிகர்களுக்குத் தேவை அதுவல்ல. மற்ற கிளப் ரசிகர்களோடு சண்டையிடுவார்கள். அடித்துக் கொள்வார்கள். ஆனால், அதற்காகக் கால்பந்தை பலிகொடுக்கமாட்டார்கள். மைதானத்துக்குள் முட்டி மோதிக்கொள்பவர்கள், அதற்கு வெளியே ஒன்றிணைந்தார்கள். விளைவு, ஒவ்வொரு இங்கிலாந்து கிளப்பாக சூப்பர் லீகில் இருந்து வெளியேறத் தொடங்கியது.

இரண்டே நாள்களில் 9 கிளப்கள் சூப்பர் லீகில் இருந்து வெளியேறின. 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில், 3 வருடத் திட்ட மிடலுக்குப் பின், 12 மிகப்பெரிய கிளப்கள் இணைந்து உருவாக்கிய சூப்பர் லீக், ரசிகர்களின் போராட் டத்தால், இரண்டே நாள்களில் உடைபட்டது!

இப்போது வென்றவர்கள் ரசிகர்கள்!

அதிகாரத்தின் விலங்குகள் எப்போதும் சாமானியனின் கைகளைக் கட்டிவிட முடியாது. ஒரு தீர்க்கமான போராட்டம் எப்பேர்ப்பட்ட நிறுவனத்தையும் அமைப்பையும் உடைக்கும். சூப்பர் லீகுக்கு எதிரான இந்தப் போராட்டம், அதிகார மனப்பான்மைக்கான மிகப்பெரிய பாடம்.