22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் மிகப்பிரமாண்டமாகத் தொடங்கியது. கடந்த ஞாயிற்று கிழமை (19 ஆம் தேதி) நடைபெற்ற அதன் இறுதிபோட்டியின் முடிவுக்காக ஒட்டுமொத்த உலகமே காத்துக்கொண்டிருந்தது.
மொத்தம் 36 அணிகள் பங்கேற்ற இந்தக் கால்பந்து போட்டியில், அர்ஜெண்டினா- பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. கால்பந்து போட்டியின் ஜாம்பவனான மெஸ்சிக்கு முக்கியமான போட்டி என்பதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. போட்டியின் முடிவில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி வாகையை சூடியது. மெஸ்ஸியின் கனவும் மெய்பட்டது.
இதனிடையே FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளையும் நேரில் சென்று பார்த்ததன் மூலம் ரசிகர் ஒருவர் உலக சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல யூடியூபர் Theo. FIFA 2022- வில் நடைபெற்ற 64 போட்டிகளையும் நேரில் சென்று பார்த்த முதல் நபர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனைக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட கால்பந்து ஒன்றையும் அவர் பரிசாகப் பெற்றுள்ளார். இது குறித்து Theo ட்விட்டரில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், என்ன ஒரு உலகக் கோப்பை அது. 64/64 உலகக்கோப்பை போட்டிகளிலும் கலந்துக்கொண்டேன். கடைசியில் அர்ஜென் டினா உலகக்கோப்பையை தட்டிச்சென்றது. பல ஏற்றத்தாழ்வுகள் ஆனால் இது ஒரு சிறந்த அனுபவம். அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.