Published:Updated:

"71வது சதத்தைத்தான் கேட்டேன். ஆனால் கோலி..."- வைரலாகும் ரசிகரின் திருமண ட்வீட்!

விராட் கோலியின் ரசிகர் அமன் அகர்வால்

"விராட் கோலி 71 சதங்கள் அடித்தால்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், தற்போது எனது ஸ்பெஷலான திருமண நாளிலேயே..." - விராட் கோலியின் ரசிகர் அமன் அகர்வால் ட்வீட்

"71வது சதத்தைத்தான் கேட்டேன். ஆனால் கோலி..."- வைரலாகும் ரசிகரின் திருமண ட்வீட்!

"விராட் கோலி 71 சதங்கள் அடித்தால்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், தற்போது எனது ஸ்பெஷலான திருமண நாளிலேயே..." - விராட் கோலியின் ரசிகர் அமன் அகர்வால் ட்வீட்

Published:Updated:
விராட் கோலியின் ரசிகர் அமன் அகர்வால்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி  317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இதில் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும், விராட் தனது மேட்ச் வின்னிங் சதத்திற்காக 'மேட்ச் ஆஃப் தி மேட்ச்' விருதையும், இரண்டு சதங்கள் அடங்கிய தொடரில் 283 ரன்கள் எடுத்ததற்காக 'தொடர் நாயகன்' விருதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் தனது 46வது சதத்தையும், சர்வதேச போட்டியில் 74வது சதத்தையும் பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை அதிக சதங்கள் அடித்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் தீவிர ரசிகர் அமன் அகர்வால் என்பவர் 'விராட் கோலி 71 சதங்களை அடிக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்' என்ற வாசகம் தாங்கிய தனது பழைய புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அதன் அருகே திருமணக் கோலத்தில் இருக்கும் தனது தற்போதைய புகைப்படத்தையும் பகிர்ந்து, "விராட் கோலி 71 சதங்கள் அடித்தால்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், தற்போது எனது ஸ்பெஷலான திருமண நாளிலேயே அவர் 74வது சதத்தையும் அடித்து எனக்குப் பரிசளித்துள்ளார்" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பலரும் இவரின் ட்வீட்டைத் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.