Published:Updated:

``என் நம்பர் எல்லோரிடமும் இருக்கிறது; ஆனால் அன்று தோனி மட்டுமே எனக்கு கால் செய்தார்"-விராட் கோலி!

தோனி, விராட் கோலி

தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய விராட் கோலி

``என் நம்பர் எல்லோரிடமும் இருக்கிறது; ஆனால் அன்று தோனி மட்டுமே எனக்கு கால் செய்தார்"-விராட் கோலி!

தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய விராட் கோலி

Published:Updated:
தோனி, விராட் கோலி

நேற்று துபாயில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 60 ரன்கள் எடுத்தார். 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த கோலியின் அபார ஆட்டம், அவர் நல்ல ஃபார்மில் உள்ளார் என்பதைக் காட்டியது. இருப்பினும், இந்தியாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சில தோய்வுகளும், கேட்ச் டிராப்களும் இந்திய அணியின் வெற்றிக்கு எதிராக மாறிவிட்டது. இதனால் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது பற்றி மகிழ்ச்சித் தெரிவித்திருந்தார். மேலும், தான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தோனி மட்டுமே தன்னை அழைத்து ஆறுதலாகப் பேசியதாகவும், அந்த சமயத்தில் வேறு யாரும் தன்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று கூறினார்.

விராட் கோலி
விராட் கோலி

இது பற்றி பேசிய அவர், "நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், தோனியிடம் இருந்து மட்டுமே மெசேஜ்கள் வந்தன. என்னுடைய நம்பர் எல்லோரிடமும் இருக்கிறது. இருப்பினும் தோனியைத் தவிர யாரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை, மெசேஜ் செய்யவில்லை. ஆனால், என்னைப் பற்றி தொலைகாட்சியிலும் பேட்டியிலும் பேசினார்கள். நீங்கள் எனக்கு அறிவுரை வழங்க விரும்பினால் என்னை அழைத்துப் பேசுங்கள் அல்லது மெசேஜ் அனுப்புங்கள். அப்படி இல்லையென்றால் நீங்கள் என்னைப் பற்றி பேசுவதில் எந்த பயனும் இருக்காது" என்று கூறினார்.