Published:Updated:

``நேசிப்பவர்கள் இருந்தாலும்கூட நான் சில நேரங்களில் தனிமையை உணர்ந்திருக்கிறேன்"- விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், இளம் விளையாட்டு வீரர்களுக்கான சில டிப்ஸ்களையும் பகிர்ந்துகொண்டார்.

``நேசிப்பவர்கள் இருந்தாலும்கூட நான் சில நேரங்களில் தனிமையை உணர்ந்திருக்கிறேன்"- விராட் கோலி

விராட் கோலி மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், இளம் விளையாட்டு வீரர்களுக்கான சில டிப்ஸ்களையும் பகிர்ந்துகொண்டார்.

Published:Updated:
விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கும் 2022 ஆசியக் கோப்பையில் விளையாடத் தயாராகி வருகிறார். இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், இளம் விளையாட்டு வீரர்களுக்கான சில டிப்ஸ்களையும் பகிர்ந்துகொண்டார். ஒரு விளையாட்டு வீரரைப் பொறுத்தவரை, சிறப்பான ஆட்டத்தை அவர்களால் கொடுக்க முடியும். ஆனால் அதேசமயம் அந்த விளையாட்டில் சாதிக்க வேண்டிய நெருக்கடி நம்முடைய மனநிலையை பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு.

விராட் கோலி
விராட் கோலி

மேலும் ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருப்பதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று நீங்கள் எப்போதும் உங்களுடைய ஆள் மனதுடன் தொடர்பில் இருப்பது. என்று அவர் கூறியிருக்கிறார். ஒரு அறை முழுவதும் என்னை ஆதரிப்பவர்களும், நேசிப்பவர்களும் இருந்தாலும் கூட நான் சில நேரங்களில் தனிமையை உணர்ந்திருக்கிறேன். ஒரு பரபரப்பான சீசனுக்குப் பிறகு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதான் எனக்கு மிகவும் பிடிக்கும். பயணம் செய்வதும் காஃபி குடிப்பதும்தான் எனக்கு மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உதவும். “ஒரு காஃபி பிரியராக என்னுடைய விருப்பம் என்னவென்றால் உலகத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள காஃபியை குடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.