Published:Updated:

சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டி; தங்கப்பதக்கம் வென்று அசத்திய விருதுநகர் மாணவர்கள்!

வில்வித்தையில் இலக்கை நோக்கி...

கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான‌ வில்வித்தைப் போட்டியில் விருதுநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டி; தங்கப்பதக்கம் வென்று அசத்திய விருதுநகர் மாணவர்கள்!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான‌ வில்வித்தைப் போட்டியில் விருதுநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Published:Updated:
வில்வித்தையில் இலக்கை நோக்கி...

கோவாவில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்றன. இந்த வில்வித்தைப் போட்டியில் தமிழ்நாடு, மலேசியா, இலங்கை, பாங்காங், நேபால், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து 265 பேர் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து, விருதுநகர் அருகே உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் செளமித் (14) மற்றும் 7-ம் வகுப்பு வித்யூத் ஸ்வேடன் (12) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தங்கப்பதக்கத்துடன் மாணவர்கள்
தங்கப்பதக்கத்துடன் மாணவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டிகளில் வென்று சொந்த ஊர் வந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

வில்வித்தையில் இலக்கை நோக்கி..
வில்வித்தையில் இலக்கை நோக்கி..

வெற்றி பெற்ற மாணவர்களை, அவர்களின் பெற்றோர், ஆசிரிய-ஆசிரியைகள், பயிற்சியாளர் மற்றும் பள்ளி ஊழியர்கள் வாழ்த்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism