Published:Updated:

1983ல் கபில்தேவ், 2007ல் தோனி; இன்று... ஒருவரை மட்டுமே ஹீரோவாகக் கொண்டாடுவது... - கௌதம் கம்பீர்!

கௌதம் கம்பீர்

இந்தியாவில் ஒருவரை மட்டும் ஹீரோவாகக் கொண்டாடும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும் (hero worship culture) என்று பேசியிருக்கிறார் கௌதம் கம்பீர்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாகியிருக்கும் கௌதம் கம்பீர் தற்போது பா.ஜ.க-வின் கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யாக இருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐடியா எக்ஸ்சேஞ்ச் பேட்டியில், கம்பீரிடம் இந்தியாவில், குறிப்பிட்ட ஒருவரை மட்டும் ஹீரோவாகக் கொண்டாடுவது, மற்ற வீரர்களின் வருங்காலத்தை பாதிக்கிறதா? என்று கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மீடியாக்கள், கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்கள் என அனைவருமே ஒருவரை மட்டுமே ஹீரோவாகக் கொண்டாடும் கலாசாரத்தைக் கைவிட வேண்டும் என்றும் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1983ல் கபில்தேவ், 2007ல் தோனி; இன்று... ஒருவரை மட்டுமே ஹீரோவாகக் கொண்டாடுவது... - கௌதம் கம்பீர்!

மேலும், சமீபத்தில் நடைப்பெற்ற ஆசியக்கோப்பைப் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி 71 சதம் அடித்ததால் எல்லோரும் அவரை மட்டுமே பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதே போட்டியில் புவனேஷ்வர் குமார் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் புவனேஷ்வர் குமாரை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. அன்று கமென்டரியில்கூட என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி பேசவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். 1983ல் கபில்தேவ், 2007, 2011ல் தோனி, தற்போது அந்த வரிசையில் கோலி ஹீரோவாக உள்ளார் எனக் கூறிய கம்பீர், சமூக வலைத்தளம் தான் இதற்கெல்லாம் காரணம் என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மட்டுமில்லை, அரசியல், பொதுநலன் ஆகிய விஷயங்களிலும், இந்தியாவில் இந்த தவறு நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.